உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நான்காவது சீசன் சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வந்தார். நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பின்னணி பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். 30 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இதுவரை மூன்று எவிக்ஷன்களை சந்தித்துள்ளது.

அதன்படி முதல் ஆளாய் நடிகை ரேகாவும் மூன்றாவது எவிக்ஷனாக பாடகர் வேல்முருகனும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனால் இரண்டாவது எவிக்ஷனில் இடம் பெற்ற ஆஜித், தன்னிடம் இருந்த எவிக்ஷன் ஃபிரி பாஸை பயன்படுத்தி எஸ்கேப்பாகி விட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை 2 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதற்கேற்றார் போல் இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் புராசஸில் 7 போட்டியாளர்கள் இடம் பெற்றனர். ஆரி, பாலாஜி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, சோம சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர். இந்த 7 போட்டியாளர்களுமே மிகவும் முக்கியமான போட்டியாளர்களாக பார்க்க படுகிறார்கள். இவர்களில் சோம சேகரை தவிர்த்து மற்ற 6 போட்டியாளர்களுமே நல்ல கன்டென்ட் கொடுப்பவர்கள்.

சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசிய பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவரை கமல் கண்டிக்க வேண்டும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதனால் இந்தவாரம் கமல் பங்கேற்கும் எபிசோடுகள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதியான இன்று கமல் ஹாசன் தோன்றி, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரின் குறை நிறைகளை கேட்பார். இந்த வாரம் கமல் ஹாசனின் பிறந்தநாள் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில், உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுகின்றனர். பிக்பாஸ் கமலிடம் ட்ரீட் கேட்க, நான் அனைவரையும் சரிசமமாக தான் ட்ரீட் செய்வேன் என்று நகைச்சுவை செய்கிறார் கமல். இந்த வாரம் யார் எவிக்ஷன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.