தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் திகழ்பவர்கள் சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலிருந்தே சதீஷுடன் நல்ல நட்பு. மெரினா திரைப்படம் துவங்கி பல வெற்றி படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சதீஷ். இவர்களின் காம்போ திரையில் இணைந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் இணைந்தாலும் என்டர்டெயின்மென்டிற்கு பஞ்சம் இருக்காது. 

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தங்கராசு நட்ராஜனுடன் வீடியோ காலில் உரையாடியுள்ளனர் சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ். ஐ.பி.எல் போட்டிகளில் அசத்தி வரும் பந்துவீச்சாளர் யார்க்கர் புகழ் நட்ராஜன். தமிழகத்தை சேர்ந்த இவர் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகிறார். நேற்று இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், நேற்றைய போட்டியில் வென்றதன் காரணமாகவும் சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் இவரை வாழ்த்தியுள்ளனர். நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகள்களைப் பெற்ற அப்பாக்கள் என்ற ஹாஷ்டேகை உருவாக்கி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நேற்றைய முன்தினம் தான் நடிகர் சதீஷுக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது கூடுதல் தகவல். 

டாக்டர் படத்தை SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு பிறகு சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான் படத்தில் நடித்து  வருகிறார் SK. ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சதீஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 2ம் வாரம் முதல் துவங்க உள்ளது என தகவல் பரவி வருகிறது. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.