வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து பாஜக பொதுச்செயலாளர் மனு அளித்துள்ளார். நீதிபதி சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கிய மாநில பாஜக தலைவா் எல்.முருகன், உள்ளிட்ட பாஜகவினா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருத்தணி முருகன் கோயிலில் இருந்து திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 6) முதல் டிசம்பா் 6 வரை வேல் யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று மாநில பாஜக தலைவா் எல்.முருகன் அறிவித்திருந்தாா். இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்தது. எனினும், திட்டமிட்டபடி யாத்திரை தொடங்கப்படும் என்று பாஜக அறிவித்தது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, வேல் யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க பாஜகவினா் திருத்தணியில் குவிந்தனா். யாத்திரையைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் தலைமையில் திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களிருந்து 1400-க்கும் மேற்பட்ட போலீஸாா் திருத்தணியில் குவிக்கப்பட்டனா்.

சிறப்பு வாகனத்தில் திருத்தணிக்கு வந்த எல்.முருகன் மலைக் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து, வேலுக்கு பூஜை செய்த பின்பு சென்னை பைபாஸ் சாலைக்கு வந்து வேல் யாத்திரையைத் தொடங்கினாா். பாஜக மூத்த தலைவா்களான பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோா் யாத்திரையை வாழ்த்திப் பேசினா்.

இதையடுத்து யாத்திரை தொடங்கிய தலைவா் எல்.முருகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்த போலீஸாா், நேற்று மாலை நேரத்தில் விடுவித்தனா். மறியலின்போது வேல் யாத்திரையை அனுமதிக்காத தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட 225 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டு சென்ற தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர். அவருடன் பங்கேற்ற அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இன்று மாலை இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது