இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து.. லைவ் வீடியோவாக நண்பர்களுக்கு காட்டிய கொடூரம்! ஓராண்டாக தொடர்ந்த அவலம்..

இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து.. லைவ் வீடியோவாக நண்பர்களுக்கு காட்டிய கொடூரம்! ஓராண்டாக தொடர்ந்த அவலம்.. - Daily news

இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, கடந்த ஓராண்டாக அதனை லைவ் வீடியோவாக நண்பர்களுக்கு காட்டிய கொடூரம் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்திய  பிரதேசத்தில் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அந்த இளம் பெண்ணுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான லாலு என்கிற இளைஞர், அறிமுகம் ஆகி உள்ளார். 

ஒரு கட்டத்தில், அந்த அறிமுகம் பழக்கமாக மாறி, அந்த பழக்கம், பின் நாளில் காதலாக மாறி உள்ளது. 

இப்படியான சூழலில் தான், அந்த இளம் பெண்ணான காதலியை, அந்த காதலன் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறான். ஆனால், அந்த ஹோட்டல் அறைக்குள் சென்றதும், அந்த இளைஞரின் நண்பர் விவேக், ஏற்கனவே வந்து அங்கு காத்திருந்து உள்ளார்.

அப்போது, அந்த காதலியிடம் பேசிய அந்த காதலன், “நீ, எங்கள் இருவரையும் திருப்திப்படுத்த வேண்டும்” என்று, கட்டாயப்படுத்தவே அந்த பெண் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி காதலன் மற்றும் அவனது நண்பன் என இருவரும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அத்துடன், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை, அவர்கள் வீடியோவாகவும் எடுத்து கைத்துக்கொண்டு, அதனை காட்டியே அந்த இளம் பெண்ணை மிரட்டி, தொடர்ச்சியாக அந்த பெண்ணை அவர்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள். 

குறிப்பாக, அந்த இரு இளைஞர்களும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் போதெல்லாம், அதனை லைவ் வீடியோவாக மற்ற நண்பர்களுக்கும் அவர்கள் காட்டி வந்திருக்கிறார்கள். 

மேலும், “இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், உன்னையும், உன் தந்தையையும், சகோதரனையும் கொலை செய்து விடுவோம்” என்று, பயங்கரமாகவே அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள். இதற்கு பயந்து அந்த பெண், இந்த கொடுமைகள் பற்றி வெளியே யாரிடமும் எதுவும் கூறாமல் இருந்திருக்கிறார்.

இதனால், கடந்த ஓராண்டு காலமாக அந்தப் பெண்ணுக்கு அந்த இரு இளைஞர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள். எனினும், அவர்களின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, “திருமணம் செய்து கொண்டு போய்விடலாம்” என்றும், அந்த பெண்ணும், தனது  வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த விசயத்தை தெரிந்தகொண்ட அந்த இரு இளைஞர்களும், அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், உடனடியாக திருமணத்தை அப்படியே நிறுத்தி உள்ளனர். இந்த தருணத்தில் தான், அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கும், இந்த விசயம் தெரிய வந்திருக்கிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 2 இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், தற்போது தலைமறைவாக உள்ள அவர்கள் இருவருயும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment