இரவில் கணவன் - மனைவியை பேருந்தில் படுக்க அனுமதித்த டிரைவர்! நள்ளிரவில் பாலியல் வேட்டையாடிய கொடூரம்..

இரவில் கணவன் - மனைவியை பேருந்தில் படுக்க அனுமதித்த டிரைவர்! நள்ளிரவில் பாலியல் வேட்டையாடிய கொடூரம்.. - Daily news

இரவில் கணவன் - மனைவியை பேருந்தில் படுக்க அனுமதித்த டிரைவர், நள்ளிரவில் அந்த கணவன் அசந்த நேரத்தில் அந்த பெண்ணை பலவந்தமாக டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரைச் சேர்ந்த டிரைவர் நவ்நாத் போங், அந்த பகுதியில் மினி பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

அப்போது, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கணவன் - மனைவி தம்பதியினர், வேலை தேடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு புனே வந்து உள்ளனர். 

2 நாட்களாக அவர்கள் வேலை தேடியதில், அந்த தம்பதிககு அங்குள்ள கட்ராஜில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை கிடைத்து உள்ளது.

அதன் படி, கணவன் - மனைவி இருவரும் தம்பதிகளா அங்கு வேலைக்கு சேர்ந்ததும், முதல் நாள் வேலையை முடிந்துவிட்டு, கடந்த 11 ஆம் தேதி 
சனிக் கிழமை இரவு, அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்து உள்ளனர்.

அப்போது, அந்த தம்பதியினர் அன்றைய இரவில் எங்கே தங்குவது என்று தெரியாமல் தவித்து உள்ளனர். அத்துடன், அன்றைய இரவில் தூங்குவதற்கு அவர்கள் இடம் தேடிக்கொண்டு ஸ்வர்கேட் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து உள்ளனர்.

அப்போது, அந்த பேருந்து நிலையம் அருகே தனது வாகனத்தை நிறுத்திய மினி பேருந்தின் டிரைவர் போங் என்பவர், அந்த தம்பதிகளிடம் வந்து “பேருந்து நிலையத்திற்குச் செல்லாமல், நீங்கள் எனது வாகனத்தில் தூங்குங்குள்” என்று, அந்த தம்பதியரிடம் அவர் கூறியிருக்கிறார்.

அதன்படியே, அந்த கணவன் - மனைவி இருவரும் அந்த மினி பேருந்தில் தூங்கி உள்ளனர்.

அப்போது, அதிகாலை 3 மணி அளவில் அந்த பெண்ணின் கணவர் எழுந்து அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறவே, அந்த டிரைவர் போங், அவரை ஸ்வர்கேட் எஸ்டி ஸ்டாண்டின் வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறைக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

இதனையடுத்து, அந்த டிரைவர் போங், தனது மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து அந்த பேருந்தில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுடன், தனது பேருந்தை அங்குள்ள ஒரு மறைவான இடத்துக்கு ஓட்டிச் சென்று உள்ளார். 

ஆனால், அதற்குள் அந்த பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண் கண் விழித்துக் கொள்ளவே, அந்த பெண்ணை கடுமையாக மிரட்டிய அந்த டிரைவர், அந்த இடத்திலேயே அந்த பெண்ணை மாறி மாறி இரு முறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். 

இதனையடுத்து, அந்த டிரைவர் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில், தனது மனைவியை தேடி வந்த அந்த பெண்ணின் கணவர், நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு, அந்த அப்பாவி கணவன் தனது மனைவியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அப்போது, அந்த பெண் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து கூறி, அவர் அழுது உள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவிக்கு நேர்ந்த இந்த கொடூரம் பற்றி, அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்த நிலையில், குற்றவாளியான அந்த டிரைவரை கைது செய்த போலீசார், சம்மந்தப்பட்ட அந்த மினி பேருந்தையும் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment