மகளை பைக்கில் நம்பி ஏற்றிவிட்ட பெற்றோர்.. கூட்டுப் பலத்காரம் செய்தவனை பைக்குடன் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு..!

மகளை பைக்கில் நம்பி ஏற்றிவிட்ட பெற்றோர்.. கூட்டுப் பலத்காரம் செய்தவனை பைக்குடன் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு..! - Daily news

பைக்கில் நம்பி மகளை பெற்றோர் ஏற்றிவிட்ட நிலையில், அந்த சிறுமியை 2 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததால், அவர்களை தேடிச் சென்று பைக்குடன் தீ வைத்து எரித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்டில் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன், பக்கத்து கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று உள்ளனர்.

பின்னர், திருமணம் முடிந்து அவர்கள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, அங்கிருந்து தங்களது கிராமத்திற்கு செல்ல பேருந்து வசதி எதுவும் கிடைக்காததால், அங்கு நீண்ட நேரமாக காத்திருந்து உள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்து உள்ளனர். அவர்களை தடுத்த நிறுத்திய அந்த சிறுமியின் பெற்றோர், அவர்களிடம் பேசிய போது, அந்த இரு இளைஞர்களும் குல்மா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனால், தங்களது ஊரைச் சேர்ந்த அந்த இருவரிடம் பேசிய அந்த பெற்றோர், “தங்களது மகளான சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்டு விடும்படி” அவர்கள் கேட்டு கொண்டனர்.

அதன்படியே, அந்த இரு இளைஞர்களும், அந்த சிறுமியை தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில், பின்னாடியே அந்த பெற்றோர் நடந்தே வந்திருக்கிறார்கள்..

அத்துடன், அந்த சிறுமியை பைக்கில் ஏற்றிச் சென்று அந்த இருவரும், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை அவர்கள் இருவரும் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனைடுத்து, அங்கிருந்து நடந்தே வீடுச் சென்ற அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் பற்றி, தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள், அந்த இரு இளைஞளையும் தேடிச் சென்று உள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட அந்த இரு இளைஞர்களையும் தேடி கண்டுப்பிடித்து அவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். ஆனால், அப்படியும், அவர்களது ஆத்திரம் தீராத நிலையில், அதில் ஒரு இளைஞன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, அந்த இளைஞனை பைக்குடன் சேர்த்து தீ வைத்து எரித்து உள்ளனர். 

இதில், ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்றொருவன் கடுமையான தீக்காயங்களுடன் அங்குள்ள அரசுப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த பகுதி போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment