வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர்! குடியரசுத் தலைவர் வரை சென்ற புகார்..

வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர்! குடியரசுத் தலைவர் வரை சென்ற புகார்.. - Daily news

வரதட்சணை கேட்டு ராணுவ வீரர் ஒருவர், தனது மனைவியின் விரலை வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகார் தற்போது குடியரசுத் தலைவர் வரை சென்று உள்ளது.

எப்போதும் போல, இந்த அதிர்ச்சி சம்பவமும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப்  பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த சுதேஷ் பால் சிங், தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். 

இவர், தனது ஒரே மகளான 31 வயதான பூஜா தோமரை, கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளார். 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அங்குள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்தனர். 

திருமணம் முடிந்த சில மாதங்கள் மட்டுமே அந்த பெண் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே “வரதட்சணை கேட்டு” தனது மனைவி பூஜாவை, அந்த ராணுவ வீரர் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

தொடக்கத்தில் பொறுமையாக இருந்த அந்த பெண், ஒரு கட்டத்தில் கணவனின் வரதட்சணை கொடுமை எல்லை மீறி போகவே, இது குறித்து பல முறை தனது தந்தையிடம் கூறி இருக்கிறார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, தனது மகளிடம் “சற்று பொறுத்துக் கொள்ளுமாறு” கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனால், வேறு வழியின்றி அந்த பெண்ணும் கணவனிடம் அஜஸ்பண்ணிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், கடந்த வாரம் மீண்டும் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு பூஜாவை, அந்த ராணுவ வீரர் கடுமையாக தாக்கி இருக்கிறார். 

அப்போது, “உடனடியாக 10 லட்சம் ரூபாயை உன் தந்தை வீட்டில் வந்து கொண்டு வருமாறு” கூறி, தனது மனைவியை அவர் இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் கணவனிடம் இருந்து அடி தாங்க முடியாமல் மயக்கம் அடைந்த பூஜாவை, அந்த ராணுவ வீரர் எழுப்ப முயன்றிருக்கிறார். ஆனால், அந்த பெண் மயங்கிய நிலையில் கிடக்கவே, அவரை எழுப்புவதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் விரலை, அந்த ராணுவ வீரர் வெட்டி இருக்கிறார். 

இதனால், ரத்தம் வெளியேறிய நிலையில், வலியால் அலறித் துடித்திருக்கிறார் அந்த பெண் பூஜா. இதனையடுத்து, அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த ராணுவ அதிகாரிகள் ஓடி வந்து அந்த பெண் பூஜாவை மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், இது தொடர்பாக அந்த ராணுவ வீரரின் மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் மனு குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக, “சம்மந்தப்பட்ட அந்த ராணுவ வீரர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்திய அந்த பெண்ணின் பெற்றோர் தற்போது குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

இதனிடையே, வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை ராணுவ வீரர் வெட்டிய சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment