நிஜத்தில் நடந்த “வாலி” படத்தின் கதை.. கணவன் என நினைத்து கொழுந்தனுடன் பாலியல் உறவில் இருந்த புதுப்பெண்!

நிஜத்தில் நடந்த “வாலி” படத்தின் கதை.. கணவன் என நினைத்து கொழுந்தனுடன் பாலியல் உறவில் இருந்த புதுப்பெண்! - Daily news

கணவனும், அவரது தம்பியும் இரட்டை பிறவிகள் என்பதால், இருவரும் ஒரே மாதிரியாக இருந்த காரணத்தால், கணவர் என்று நினைத்து, கொளுந்தனுடன் புதுமனப் பெண் கடந்த 6 மாதமாக பாலியல் உறவில் இருந்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டம் ரிங் ரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், இரட்டை சகோதரர்களாக தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த இளைஞர்கள், இரட்டை சகோதரர்கள் என்பதால், இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக காணப்படுவதுண்டு.

இப்படியான சூழலில் தான், இரட்டை சகோதரர்களான அண்ணனுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது.

திருமணத்திற்கு பிறகு, அண்ணன் - தம்பி இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பதாலும், இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததாலும், இருவரில் யார் தனது கணவர் என்று அடையாளம் காண்பதில் அந்த புதுப் பெண்ணுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்ணின் கணவனுடைய தம்பியான கொழுந்தன், தனது அண்ணி மீது சபலப்பட்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், கணவன் அழைப்பது போல், தனது அண்ணியை, பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.  

அந்த பெண்ணும், தனது கணவர் தான் அழைக்கிறார் என்று நினைத்து, அந்த புதுப் பெண் அவருடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறார். இப்படியாக, கடந்த 6 மாத காலம் தொடர்ந்திருக்கிறது. 

இந்த நிலையில் தான், தான் கடந்த 6 மாதமாக பாலியல் உறவு கொண்டது கணவர் அல்ல, கணவனின் தம்பியான கொழுந்தன்” என்ற தகவல், அந்த பெண்ணுக்கு, 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தெரிய வந்திருக்கிறது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த விசயத்தை தனது கணவரிடம் கூறி அழுதிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்டு சந்த அதிர்ச்சியும் அடையாத அந்த கணவன், சற்றும் எதிர்பார்க்காத வகையில், “நானும் எனது தம்பியும் ஒன்றாகவே வளர்த்தோம். ஒன்றாகவே ஒரே பெண்ணுடன் வாழ்ந்து விட்டுபோகிறோம். இதனை, இப்படியே விட்டுவிடு” என்று கூறியதாக தெரிகிறது.

குறிப்பாக, “நீ, அவன் ஆசைக்கு இணங்க வேண்டும்” என்றும், வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. 

இதனைக் கேட்டு, கடும் அதிர்ச்சி அடைந்த அந்த புதுப் பெண், தனது அம்மா வீட்டிற்கு கிளம்பிச் சென்று, நடந்ததை சொல்லி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், அங்குள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த இரட்டை சகோதரர்களை அதிரடியாக கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment