“கணவர் இல்லாதபோது வருவார்.. உல்லாசமாக இருப்போம்! மகள் இருக்கும்போது வந்ததால் கொன்றுவிட்டேன்..!” கள்ளக் காதலி வாக்குமூலம்..

“கணவர் இல்லாதபோது வருவார்.. உல்லாசமாக இருப்போம்! மகள் இருக்கும்போது வந்ததால் கொன்றுவிட்டேன்..!” கள்ளக் காதலி வாக்குமூலம்.. - Daily news

“கணவர் இல்லாதபோது வீட்டிற்கு வருவார், அப்போது நாங்கள் உல்லாசமாக இருப்போம். ஆனால், எனது இரு மகள்கள் இருக்கும்போது வந்ததால், அவரை கொன்றுவிட்டோம்” என்று, திமுக பிரமுகரை கொலை செய்த கள்ளக் காதலியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அடுத்து உள்ள மணலி பகுதியைச் சேர்ந்த 63 வயதான சக்கரபாணி என்பவர், திருவொற்றியூர் 7 வது வார்டு திமுக பிரமுகராக இருந்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வரும் தொழில் செய்து வந்தார். 

இந்த சூழலில் தான், இவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த தமீம் பானு என்பவர் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். 

இந்த தமீம் பானுவுக்கு 14 வயதில் மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர். 

இப்படியான நிலையில்தான், இந்த திமுக பிரமுகருக்கும் தமீம் பானுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நாளடைவில் இந்த விசயம், தமீம் பானுவின் கணவருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது வீட்டை ராயபுரத்திற்கு மாற்றிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கேயும் தொடர்ந்து வந்து சக்ரபாணி, தனது கள்ளக் காதல் உறவை அவர் தொடர்ந்திருக்கிறார். 

அதாவது, கணவர் இல்லாத நேரத்தில் கடன் கேட்டு வருவது போல், அங்கேயும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார். வீடு மாறினாலும், அந்த வீட்டிலும் அவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், “இப்படி அடிக்கடி வரவேண்டாம்” என்று, அந்த பெண்  சொல்லியும், சக்ரபாணி இதனை கேட்காமல் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார். இதனால், பிரச்சனையாகி உள்ளது.

இப்படியான நேரத்தில் தான், தமீம் பானுவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளக் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, அந்த பெண் வசித்து வரும் கீழ் தளத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபு உடன், அந்த பெண்ணுக்கு கள்ளக் காதல் உறவு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்திருக்கின்றனர். 

இப்படியான சூழலில் தான், கடந்த 10 ஆம் தேதி இரவு சக்கரபாணி கடுமையான குடி போதையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு தள்ளாடி வந்திருக்கிறார்.

அப்போது, அந்த வீட்டில் அந்த பெண்ணின் 2 மகள்களும் இருந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, “வீட்டிற்குள் வர வேண்டாம்” என்று கூறி, அந்த பெண் அவரை தடுத்து நிறுத்தி உள்ளார். ஆனால், எதையும் கேட்காத அவர், அதையும் மீறி வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணை, அவரது மகள்கள் முன்பே வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து, பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியும், ஆத்திரமடைந்த அந்த பெண் சத்தம் போட்டு கத்தவே, கீழ் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் தம்பி வாசிம் பாஷா வந்து அடிக்க பாய்ந்தான்.

இந்த சூழலில், அவனுடன் நானும் சேர்ந்து சக்கரபாணியை கீழே தள்ளி, அரிவாள் மனை மற்றும் கத்தியால் அவரது தலையை வெட்டி அவரை கொலை செய்தோம். 

இதனையடுத்து, அவரது உடலை 10 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு, தலையையும் குடலையும் தனித்தனியே பிளாஸ்டிக் பைகளில் போட்டு, காசிமேடு பகுதி மற்றும் துறைமுக பகுதியில் வீசிவிட்டோம். 

குறிப்பாக, அடையாறு ஆற்றில் டில்லி பாபு சென்று, அவரது தலையை தூக்கி வீசி விட்டு வந்திருக்கிறார். 

இந்த சூழலில் தான், தூக்கி வீசப்பட்ட தலையை, இத்தனை நாட்கள் தேடியும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால், இது தொடர்பான வழக்கை, போலீசார் முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment