வரதட்சணை கொடுமை.. மனைவியை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூர கணவன்!

வரதட்சணை கொடுமை.. மனைவியை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூர கணவன்! - Daily news

வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டமாக, நண்பர்களுடன் சேர்ந்து, கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தானின் மாநிலம் பரத்பூர் கமான் பகுதியை சேர்ந்த கடண்டஹ் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அரியானாவை சேர்ந்த இளம் பெண்ணை திருமண செய்து கொண்டார். 

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவரும் ராஜஸ்தானில் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால், திருமணத்திற்கு பிறகு அடுத்த சில நாட்களிலேயே அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததுடன், கொடுமைப்படுத்தி வந்து உள்ளனர்.

இதனால், அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது, அவரது கணவன் பின்னாடியே சென்று தனது மனைவியை சமாதானப்படுத்துவது போல், ஏமாற்றி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார்.

அத்துடன், தனது மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்ததும், அந்த கணவன் தனது உறவினர்கள் இருவரை தனது வீட்டிற்கு வரவழைத்து “என் மனைவியை என் எதிரிலேயே நீங்கள் பலாத்காரம் செய்யுங்கள்” என்று கூறி, அதிர்ச்சி ஏற்படுத்திருக்கிறான்.

இதனைக் கேட்டு, அப்படியே அதிர்ந்து போய் அந்த இளம் பெண் நின்ற நிலையில், அந்த கணவனின் உறவினர்கள் இருவரும், அந்த கொடூர கணவனின் கண் முன்னாடியே அவரது மனைவியை பலவந்தமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

மேலும், கொடூரத்தின் உச்சமாக தனது மனைவியை தனது உறவினர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்வதை, அந்த கணவன் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து உள்ளார்.

தனது மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததும், அந்த கொடூர கணவன் தனது மனைவியிடம் “உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு வரதட்சணை தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், இப்போது உன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை நான் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, அதன் மூலமமாக நான் அந்த பணத்தை சம்பாதிப்பேன்” என்று கூறி இருக்கிறார்.

அதன்படியே, அந்த ஆபாச வீடியோவையும், அந்த கணவன் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் பரத்பூர், அங்குள்ள கமான் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசும் போது, “எனது மாமியார் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தி வந்தார். அவர்களுக்கு என் பெற்றோர் வரதட்சணை கொடுக்காததால், என் கணவனின் உறவினர்கள் என்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து உள்ளனர்” என்று, கூறியுள்ளார்.

மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு உறவினர், கடந்த 5 நாட்களுக்கு முன், என்னை கமான் என்னும் பகுதிக்கு அழைத்துச் சென்று என்னை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், தற்போது அங்கிருந்து தப்பித்து என் வீட்டிற்கு வந்தேன்” என்றும், அந்த பெண் கூறி உள்ளார்.

Leave a Comment