மாமியார் - மருமகன் இடையே கள்ளக் காதல்! வெளியே தெரிந்ததால் தூக்கிட்டு தற்கொலை!

மாமியார் - மருமகன் இடையே கள்ளக் காதல்! வெளியே தெரிந்ததால் தூக்கிட்டு தற்கொலை! - Daily news

மாமியார் - மருமகன் இடையே கள்ளக் காதல் இருந்து வந்த விசயம், வெளியே தெரிந்ததால் அவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்து உள்ள மேற்கு ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, கடந்த ஆண்டு முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. 

திருமணம் முடிந்து அவர் தனது மனைவியுடன் அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்து உள்ளார்.

அப்படியான தருணங்களில், அந்த இளைஞருக்கு அவரது மாமியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அவர் சபலப்பட்டு உள்ளார் என்றே கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த மருமகன், அந்த மாமியாரை அனுகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொடக்கத்தில் விலகி விலகிச் சென்ற அந்த மாமியார், ஒரு கட்டத்தில் மருமகனை  காதலிக்க ஆரம்பித்தார் என்றும், கூறப்படுகிறது. 

அதன்படி, அந்த மாமியாரும் - அந்த மருமகனும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர் என்றும், கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், மாமியார் - மருமகன் கள்ளக் காதல் விவகாரம், அவர்களது இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர்களது இரு குடும்பத்தினரும், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில், இருவரின் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், “இனி நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது” என்று, அவர்கள் தனியாக பேசி முடிவு செய்ததாகவும், கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கள்ளக் காதலர்களான அந்த மாமியாரும் - மருமகனும் சேர்ந்து அங்குள்ள லாங்கோரா பேன்டா பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு, அந்த ஊர் எல்லையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அந்த மரத்தில் இருவர் தற்கொலை செய்துகொண்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதற்குள் அந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து தற்கொலை செய்துகொண்ட இருவரின் உடல்களையும் போலீசாரின் உதவியுடன் மீட்டு உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், “அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்ததும், இது குறித்து அவர்களது வீட்டினருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும்” தெரிய வந்தது.

பின்னர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் பிரதே பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்த நிலையில், இருவரின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, மாமியார் - மருமகன் இடையே கள்ளக் காதல் இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment