“மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்..” ஆபாசமாக மெசேஜ் அனுப்பி செக்ஸ் டார்ச்சர் செய்த ஆசிரியர்!

“மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்..” ஆபாசமாக மெசேஜ் அனுப்பி செக்ஸ் டார்ச்சர் செய்த ஆசிரியர்! - Daily news

பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி செக்ஸ் டார்ச்சர் செய்த ஆசிரியர் அதிரடியாக போக்ஸோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் மீண்டும் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை முகப்பேர் கிழக்கில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் வேதியியல் பாடப் பிரிவு ஆசிரியராக பணி புரிந்து வரும் ஆசிரியர் ஸ்ரீதர், தன்னிடம் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ்ஆப்பில் மிகவும் ஆபாசமாக உரையாடியதாகவும், அந்த மாணவிகளின் செல்போனுக்கு ஆபாசமாக சாட்டிங் செய்யும், பேசியும் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, அந்த ஆசிரியரின் பாலியல் அத்து மீறில்கள் எல்லை மீறி போகவே, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாதிக்கப்பட்ட மாணவிகள், இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் கூறி அழுது உள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், சென்னை மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரி கஸ்தூரியிடம் புகார் அளித்தனர். 

இந்த புகார், அதிகாரிகளிடம் இருந்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்னொரு பக்கம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். 

அதாவது, வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள், ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்பான ஆடியோ மற்றும் வாட்ஸ்ஆப் சாட்டிங் உள்ளிட்ட ஆதாரங்களுடன் குழந்தை நல குழுவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குழந்தை நல அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “ கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் பள்ளி மாணவிகளின் செல்போன் எண்களை ஆசிரியர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டு, அந்த மாணவிகளிடம் ஒரு கட்டத்தில் ஆபாசமாகவும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலும் அந்த ஆசிரியர் பேசி வந்தது தெரிய வந்திருக்கிறது.

மேலும், “கொரோனா காலம் முடிந்த பிறகு, நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு சில மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் வெளியில் செல்வதும், வகுப்பு நேரம் முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையிலேயே மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும்” கூறப்படுகிறது. 

அத்துடன், “பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட மாணவிகளை வைத்து அவர்களுடன் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு ஸ்ரீதர் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும்” தெரிய வந்தது. 

இது தொடர்பாக போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆசிரியர் ஸ்ரீதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமறைவாகி உள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரை அடுத்து, பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment