“சூப்பர் டீலக்ஸ்” பட பாணியில் செக்ஸின் போது உயிரிழந்த முதியவர்! பரிதவித்து நின்ற பெண்..

“சூப்பர் டீலக்ஸ்” பட பாணியில் செக்ஸின் போது உயிரிழந்த முதியவர்! பரிதவித்து நின்ற பெண்.. - Daily news

“சூப்பர் டீலக்ஸ்” பட பாணியில் செக்ஸில் ஈடுபட்ட போது, முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லாவில் செயல்பட்டு வரும் ஒரு பிரபலமான ஓட்டலில், சுமார் 40 வயது மதிக்கத் தக்க பெண்ணுடன், 61 வயதான முதியவர் ஒருவர் வந்திருக்கிறார்.

அந்த 61 வயது நபர், அவருக்கான அறையில் உள்ளே சென்றதும், குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் அவர் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்திருக்கிறார். இனதால், பதறிப்போன அந்த 40 வயதான பெண், “என்ன செய்வது?” என்று தெரியாமல் அப்படியே பதறிப்போய் நின்று உள்ளார்.

இதனையடுத்து, அந்த ஓட்டலின் வரவேற்பறையில் அந்த பெண் தகவல் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விரைந்து வந்த ஓட்டல் ஊழியர்கள், அந்த அறைக்கு வந்து பார்த்து உள்ளனர்.

அப்போது, அந்த முதியவர் அங்கு பேச்சு மூச்சின்றி கீழே கிடந்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த ஓட்டல் ஊழியர்கள் அங்குள்ள குர்லா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயங்கி கிடந்த முதியவரை மீட்டு, அங்குள்ள சயான் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். 

அங்கு, அந்த முதியவரிடம் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், “அந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக” மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “அந்த முதியவர் உயிரிழந்து எப்படி?” என்று, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, உயிரிழந்த முதியவருடன் தங்கி இருந்த 40 வயதான பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “உயிரிழந்த முதியவர், ஒர்லியை சேர்ந்தவர் என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும்” தெரிய வந்தது.

முக்கியமாக, “அந்த முதியவர், தன்னுடன் உல்லாசம் அனுபவித்தபோது, அந்த அறையில் மது குடிக்க முயன்றார் என்றும், அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்” என்றும், அந்த பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, உயிரிழந்த அந்த நபரின் உடலை, போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

குறிப்பாக, இந்த சம்பவம் தொடர்பாக பேசிய போலீஸ் உயர் அதிகாரிகள், “இந்த வழக்கில், முதற்கட்டமாக கிடைத்த தகவலின் படி, உயிரிழந்த நபர்  விபத்தில் இறந்ததாக வழக்குப் பதிவு செய்து உள்ளோம் என்றும், உயிரிழப்புக்கான உரிய காரணத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும்” அவர் கூறினார்.

மேலும், “உயிரிழந்த நபர், ஏதேனும் மாத்திரையை உட்கொண்டாரா? என்பதை அறியும் விதமாக பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றும், அவர் கூறினார். இச்சம்பவம், மும்பையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment