“காத்துவாக்குல ஆளுக்கு 2, 2 காதல்!” பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு தலை முடியை அறுத்த கொடூரம்!

“காத்துவாக்குல ஆளுக்கு 2, 2 காதல்!” பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு தலை முடியை அறுத்த கொடூரம்! - Daily news

பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு தலை முடியை அறுத்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, ஒரு இளம் பெண்ணின் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில், ஒரு இளைஞர் அந்த இளம் பெண்ணை கடுமையாக தாக்கிக்கொண்டே, அவரது தலை முடியை அறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் மற்றும் 2 நபர்கள் இருக்கும் நிலையில், ஒரு இளம் பெண் மட்டும் அவரது கைகளை பின்னால்  கட்டப்பட்ட நிலையில் இருக்கும் நிலையில், அந்த பெண்ணை அங்கிருக்கும் ஒரு நபர் ஆபாசமாக திட்டிக்கொண்டே அவரை கடுமையாக எட்டி உதைக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணின் தலைமுடியை கத்திரிக்கோலால் அந்த நபர் அறுக்க முற்படுகிறார். ஆனால், அந்த கத்திரிக்கோல் சரியாக அறுக்க முடியாததால், அவர் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே, கிச்சனுக்குள் சென்று அரிவாள் மனையை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் பேசியபடியே, அந்த தலைமுடியை அப்படியே அறுக்கிறார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வைரலானதை அடுத்து, இது போலீசாரின் கவனத்திற்கும் சென்று உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், “கைகள் கட்டப்பட்டு கிடக்கும் அந்த பெண்ணின் பெயர் பானு” என்பதை கண்டறிந்தனர்.

அதே போல், அந்த பெண்ணின் முடியை அறுக்கும் நபரின் பெயர் கார்த்தி” என்பதும், தெரிய வந்தது. 

குறிப்பாக, இவர்கள் 2 பேரும் கணவன் - மனைவி என்பதும், இவர்கள் இருவரும் 2 வது முறை திருமணம் ஆனவர்கள் என்பதும்” தெரிய வந்தது.

முக்கியமாக, இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில், அந்த பெண் பானு, தற்போது தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, “அந்த பெண் பானு, ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், 2 வதாக கார்த்திக்கை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் தான், அவரையும் பிரிந்து, 3 வதாக திருமணம் செய்ய முயன்றதாகவும், பானு மீது கார்த்திக் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில் பானுவை தேடி கண்டுபிடித்து கார்த்திக், அந்த பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு, அவரது தலை முடியை அறுக்கும் கொடூரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவற்றுடன், அந்த பெண் பானுவை, கார்த்திக் கம்பியால் தாக்கி மிகவும் கொடுமைப்படுத்தியதும் தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களாக பானு சென்னை வடபழனியில் வசித்து வந்த நிலையில், தற்போது வீட்டை காலி செய்து விட்டு, வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வந்த நிலையில் தான், அவரை தேடி கண்டுப்பிடித்து அவரது தலை முடியை அறுத்துள்ளார். எனினும், இந்த வீடியோ தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment