“என் உதட்டை கடித்து.. நடிப்பு பயிற்சி என்றார்..” பிரபல நடிகர் மீது இளம் பெண் மீ டூ வில்  பாலியல் புகார்!

“என் உதட்டை கடித்து.. நடிப்பு பயிற்சி என்றார்..” பிரபல நடிகர் மீது இளம் பெண் மீ டூ வில்  பாலியல் புகார்! - Daily news

“என் உதட்டை கடித்து, நடிப்பு பயிற்சி என்று, என்னிடமே அந்த நடிவர் விளக்கம் அளித்தார்” என்று, பிரபல நடிகரிடம் நடிப்பு பயிற்சி பெற்ற இளம் பெண்? மீ டூ வில் பாலியல் புகார் அளித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக்கில் பிரபலமான பெண்கள் பலரும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வருகின்றனர். 

இதனால், உலகம் முழுவதும் பல பிரபலங்களின் மீதும் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் மற்றும் பல இளம் பெண்களும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைத்து வருகின்றனர். அத்துடன், மீ டூ புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக, #metoo ஹேஷ்டேக்கில் இணையத்தில் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்கள் பற்றிய பாலியல் புகார்களின் சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அந்த வகையில், தற்போது  #metoo ஹேஷ்டேக்கில் பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன் மீது, பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ள பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன், பல்வேறு படங்களில் நடித்து கேரளாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருகிறார்.

அத்துடன், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “திரிஷ்யம்” படத்தில், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அவர் புகழ் பெற்றார்.

அதே போல், “ஒரு அடார் லவ்”, “டிரைவிங் லைசென்ஸ்”, “லூசிபர்” உள்பட பல்வேறு படங்களில் நடித்தின் மூலமாக, நடிகர் அனிஷ் மேனன் இன்னும் புகழ் பெற்றவராக திகழ்ந்து வருகிறார்.

இவர், தமிழில் “தீக்குளிக்கும் பச்சை மரம்”, “நம்ம கிராமம்” உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார். 

இந்த நிலையில் தான், மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராக வலம் வரும் அனீஷ் மேனன், அவரிடம் நடிப்பு பயிற்சி பெற்று வந்த இளம் பெண் ஒருவர், தற்போது மீ டூ புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், “சிறுவயதில் இருந்தே எனக்கு நடிப்பு மீது அதிகம் ஆர்வம் இருந்தது. 

முக்கியமாக “மோனோ ஆக்ட்” எனப்படும் தனிப்பட்ட முறையில் வந்து நடிப்பு பயிற்சி சொல்லித் தருவது. இப்படியாக, “மோனோ ஆக்ட்” வகையில் பெரிய மனிதர்களின் வாரிசுகளுக்கு நடிகர் அனீஷ் ஜி மேனன், தனிப்பட்ட முறையில் நடிப்பு பயிற்சி சொல்லிகொடுத்து வந்தார்.

அவரிடம், பல குழந்தைகளுக்கு “மோனோ ஆக்ட்” மற்றும் “நாடகம்” தொடர்பாக தனிப்பட்ட முறையில் நடிப்பு பயிற்சி பெற்று வந்தனர்.

அந்த வகையில், நடிகர் அனீஷ் ஜி மேனனிடம், என்னையும் சேர்த்து தொழில் ரீதியாக படிக்க வைக்க வேண்டும் என்று எனது பெற்றோர் விரும்பினார்கள். 

இது குறித்து நடிகர் அனீஷை அணுகி அவர்கள் விபரங்களை கேட்டப் பிறகு, மோனோ ஆக்ட் முறையில் நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்க எனக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, நானும் அவரிடம் நடிப்பு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றேன். 

அது முதல் நடிகர் அனீஷ் எனக்கு மோனோ ஆக்ட் முறையில் நடிப்பை கற்றுத் தரத் தொடங்கினார். அத்துடன், எப்போதும் என் மீது அதிக அன்பு காட்டும் அவர், எப்போதுமே என் கன்னங்களை தடவுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

அதன் பிறகு, அவர் அதிக சுதந்திரத்தை என்னிடமிருந்து எடுக்கத் தொடங்கினார். நடிப்பின் போது, எனது பொசிஷன் திருத்தம் செய்கிறேன் என்றும், எனது தோரணை அழகு என்று சொல்லி என் அந்தரங்க உறுப்புகளை அடிக்கடி தொட ஆரம்பித்தார்.

இப்படியாக, எனது உடலை தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்றே, எனது பெற்றோரையும் அவர் நம்ப வைத்தார். 

இதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதி என்று என் பெற்றோர் கூட, அந்த நடிகரால் தவறாக வழி நடத்தப்பட்டது என்னால் நம்பவே முடியவில்லை.

இப்படியாக, ஒரு கட்டத்தில் எனக்கு முத்தமிட்டு என் உதட்டை கடித்து, அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், நான் அழுதுவிடடேன். எனக்கு அப்போது ஒரு வித பயமும் வந்தது. 

இது குறித்து எனது பெற்றோரிடம் கூறி, நான் எனக்கு நடிப்பு பயிற்சியே வேண்டாம் என்றே சொல்லிவிட்டேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். என்னைப் போல், பல பெண்கள் அவரால் இப்படியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம். 

இந்த பாலியல் குற்றச்சாட்டை நான் வெளியே சொல்ல எனக்கு பல ஆண்டுகள் ஆனது. இப்படியாக, அந்த நடிகரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பல  சிறுமிகளும் இருக்கலாம். 

என்னைப் போல் ஒருவர் வெளிப்படையாகப் பேசினால், மற்றவர்களுக்கு தைரியம் வந்து விடும் என்பது என் நம்பிக்கை” என்று, தனது புகாரில் அந்த பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், இந்த குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதனால், இந்த பாலியல் குற்றச்சாட்டு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

Leave a Comment