8 ஆம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு, உடன் படிக்கும் சக 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறும் இது மாதிரியான கொடுமையான சம்பவங்கள், தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை ராசிபுரம் அடுத்து உள்ள காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2 வது மகளுக்கு 13 வயதும், 3 வது மகளுக்கு 11 வயதும் ஆகும் நிலையில், இவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

அத்துடன், இந்த சிறுமிகளின் தாயார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை பணியாற்றி வருகிறார்.

இப்படியான சூழலில் தான், 2 வது மகளான 13 வயது சிறுமி, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அத்துடன், இந்த மாணவியுடன் படிக்கும் சக 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், குறிப்பிட்ட அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், குறிப்பிட்ட அந்த 4 மாணவர்களும் அந்த 8 ஆம் வகுப்பு மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து உள்ளனர்.

அப்போது, அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது, அந்து வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு, அந்த  மாணவியிடம் அத்து மீறி நடந்துகொண்ட அந்த 4 பேரும், அந்த மாணவியை அவரது வீட்டின் உள்ளேயே கட்டிப்போட்டு உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, அந்த 8 ஆம் வகுப்பு மாணவியை, சக 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேரும் சேர்ந்து, அந்த மாணவியின் ஆடைகளை கழற்றி தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டு கூச்சல் போட்டு உள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்த 4 மாணவர்களும், “இந்த விசயம் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னை நாங்கள் கொன்று விடுவோம்” என்று, பயங்கரமாக அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். 

இதனையடுத்து, அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டு, அந்த 4 பேரும் அந்த வீட்டில் இருந்து வெளியேறி, அவரவர் வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

இந்த சம்பவதால் பயந்து போன அந்த மாணவி, தனக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமை பற்றி வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லாமலேயே இருந்திருக்கிறார். 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, இது குறித்து முதலில் தனது தங்கையிடம் கூறி அழுதிருக்கிறார். பின்னர், அந்த தங்கையின் மூலமாக, இந்த பாலியல் வன்கொடுமை விசயம், அந்த சிறுமியின் தாயாருக்கும் தெரிய வந்தது.

இதனை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாயார், இது குறித்து நேராக பள்ளிக்கு சென்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இது தொடர்பாக அங்குள்ள “காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி, ஆலோசனை” வழங்கி உள்ளார். அதன்படியே, அந்த சிறுமியின் தாயார் அங்குள்ள ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்குப் பிறகு, சம்மந்தப்பட்ட 4 மாணவர்களையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதின்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம், காசிமேடு பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.