திருமணமானதை மறைத்து.. சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்!

திருமணமானதை மறைத்து.. சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்! - Daily news

திருமணமானதை மறைத்த இளைஞர் ஒருவன், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபேர் உசேன் என்பவர், ஆவடி அருகே உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்து உள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இதனை வெளியே கூறாமல், தான் திருமணம் ஆகாதவர் போல் வெளியே கூறிக்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, அவர் பணி புரிந்து வந்த கடைக்கு பல பெண்களும் செல்போன் ரீசார்ஜ் செய்ய வந்து செல்வது வழக்கம்.

அப்படியான தருணங்களில், தனக்கு திருமணமானதை மறைத்த சுபேர் உசேன், அதே கடையில் தன்னுடன் பணியாற்றி வந்த ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை தனது காதல் வலையில் வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்கு ஆசைக்கு மேல் ஆசைகள் காட்டி, தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற அந்த இளைஞன், அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அந்த சிறுமி வேலையை முடித்துவிட்டு, இரவில் வீடு திரும்பாத நிலையில், கடும் அதிரச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அந்த பெண் கிடைக்காத நிலையில், “எங்களது மகளை காணவில்லை” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுபேர் உசேனை கைது செய்து, அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பான விசாரணையில், “அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது” உறுதி செய்யப்பட்டது. அந்த குற்றத்தையும் அவர் ஒத்துக்கொண்டார். 

இதனையடுத்து, அந்த இளைஞன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிரடியாக சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது. 

Leave a Comment