“உன்னால என் புருஷன் டைவர்ஸ் பண்ணிட்டார்.. இப்ப நீயும் கழட்டி விட பார்க்குறியே..” கள்ளக் காதலன் வீட்டு முன் கதறிய பெண்ணால் பரபரப்பு..

“உன்னால என் புருஷன் டைவர்ஸ் பண்ணிட்டார்.. இப்ப நீயும் கழட்டி விட பார்க்குறியே..” கள்ளக் காதலன் வீட்டு முன் கதறிய பெண்ணால் பரபரப்பு.. - Daily news

“உன்னால என் புருஷனும் என்னை டைவர்ஸ் பண்ணிட்டார், இப்ப நீயும் என்னை கழட்டி விட பார்க்குறியே..” என்று, கள்ளக் காதலன் வீட்டு முன் பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டுள்ளாராக பணி புரிந்து வருகிறார். 

இவர், அந்த நகைக்கடையில் வேலை பார்த்து வந்து வந்த அந்த சூழலில், அந்த நகைக் கடையின் உரிமையாளர் மனைவியுடன் அந்த இளைஞருக்கு கள்ளக் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கும்பகோணத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டதால், அந்த இளைஞனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். 

இது, அந்த நகை கடை உரிமையாளருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த நகை கடை முதலாளி, தனது மனைவியுடன் சண்டையிட்டு, அவரை அடுத்த சில மாதங்களில் விவகாரத்து செய்து உள்ளார். பின்னர், அந்த இளைஞனையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். 

அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞன், ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்ந்தார்.

அதே நேரத்தில், அந்த நகை கடையின் முதலாளி மனைவியுடன், அந்த இளைஞன் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.

இப்படியாக, கிட்டதட்ட 13 வருடங்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், தற்போது அந்த பெண்ணுக்கு 44 வயது ஆகும் நிலையில், அந்த இளைஞன் அந்த காதலியை விட்டு விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக, அந்த பெண் கண்டுப்பிடித்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அந்த இளைஞன், அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்று உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த இளைஞரின் வீட்டு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசாரிடம், “நான், இவருடன் கள்ளக் காதல் உறவு இருந்ததால் தான்,  என் கணவர் என்னை விவாகரத்து செய்தார் என்றுமு், அப்போது 35 லட்சம் ரூபாய் பணமும் 70 பவுன் நகைகளையும் எனக்கு அவர் கொடுத்தார் என்றும், ஆனால் அந்த நகைகளை எல்லாவற்றையும் நான் இவரிடம் தான் கொடுத்தேன்” என்றும், கூறினார்.

மேலும், “நாங்கள் இருவரும் 13 வருடங்களாக கணவன் - மனைவியாக வாழ்ந்தோம் என்றும், இப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும், மாறாக அவர் என்னை தான் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றும், அவர் போலீசாரிடம் அடம் பிடித்திருக்கிறார். 

குறிப்பாக, “அப்படி என்னை திருமணம் செய்யவில்லை என்றால், என்னிடம் இருந்து வாங்கிய 35 லட்சம் ரூபாய் பணத்தையும், 70 பவுன் நகைகளை என்னிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்றும், கூறி அவர் கதறி அழுதிருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment