ரவுடி பேபி சூர்யா மீது ஏற்கனவே புகார் அளித்தவர்களுக்கு அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம், ரவுடி பேபி சூர்யாவுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அய்யம்பாளையம் அடுத்த சபரிநகரைச் சேர்ந்த “சுப்புலட்சுமி” தான், டிக்டாக்கில் தன் பெயரை “சூர்யா” என்ற பெயரில் தொடர்ந்து அலப்பறைகள் செய்து சேட்டையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இதனால், “ரௌடி பேபி சூர்யா” என்றால், டிக்டாக் பிரியர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு அவர் டிக்டாக் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார்.

அதாவது, கடந்த ஆண்டு, ரவுடி பேபி சூர்யா சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், ஊர் திரும்பினார். அப்போது, திருப்பூரில் உள்ள தனது வீட்டில் அவர் இருந்து வந்த நிலையில், “பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாக” டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார்.

அதே போல், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தனம் உட்பட 10 க்கும் மேற்பட்ட பெண்கள் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

மேலும், “ஆன்லைனில் ஆபாசமாக பேசி வரும் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்ய வேண்டும்” என்று, சமூக ஆர்வலர்கள் சிலரும் அவர் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து, அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சூழலில் தான், “ரவுடி பேபி சூர்யா - சிகந்தர் மீது புகார் கொடுத்த நபர்களுக்கு, அவர்களது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக” கோவை டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளித்து உள்ளனர். 

அதாவது, “சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூபில் மிகவுமு் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா - சிகந்தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி” கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில், முத்து ரவி என்ற நபர் பாதிக்கப்பட்ட திலகா தரப்பு சார்பில் புகார் மனு அளித்து உள்ளார்.

ஏற்கனவே அளித்த புகாரின் பேரில், ரவுடி பேபி சூர்யா - சிகந்தர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் தான், புகார் கொடுத்த காரணத்திற்காக ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் மூலம் ரவுடி பேபி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள், கோவை டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர். 

அது தொடர்பான ஆதாரங்களையும் அவர்கள் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

அதன் படி, ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் விடுத்த கொலை மிரட்டலால், புகார் அளித்து உள்ள திலகவதி தரப்பு “தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக” கடும் வேதனை தெரிவித்து உள்ளனர். 

இதனால், “எங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், இதனால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், கோவை டிஐஜியிடம் அவர் புகார் மனு கொடுத்து வலியுறுத்தி உள்ளார்.

இந்த புகார் மனுவால், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிகந்தர் ஆகிய இருவருக்கும் மீண்டும் புதிய சிக்கல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.