“நான் உன் பொண்டாட்டியை வச்சிருக்கேன்டா..” மனைவியுடன் சேர்ந்து கணவனுக்கு வீடியோ கால் செய்த கள்ள காதலன்!

“நான் உன் பொண்டாட்டியை வச்சிருக்கேன்டா..” மனைவியுடன் சேர்ந்து கணவனுக்கு வீடியோ கால் செய்த கள்ள காதலன்! - Daily news

“நான் உன் பொண்டாட்டியை வச்சிருக்கேன்டா” என்று, மனைவியுடன் சேர்ந்து வெளிநாட்டில் உள்ள கணவனுக்கு கள்ள காதலன் வீடியோ கால் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வேம்பள்ளே பாரதி நகரில் ஷேக் பராகான் என்ற பெண், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த பெண்ணின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வேலை விசயமாக குவைத்துக்கு சென்று, அங்கிருந்து வேலை செய்து வருகிறார்.

அத்துடன், தனது மனைவிக்கு அங்கிருந்தபடியே அவரது மனைவிக்கு மாதம் மாதம் பணம் அனுப்பி வந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், இங்கு வீட்டில் இருந்த மனைவிக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இது, அந்த பெண்ணின் கணவரின் உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாததால், இந்த விசயத்தை அந்த கணவனின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த கள்ளக் காதலன் பாஷா, கள்ளக் காதலி பரஹானுடன் உல்லாசமாக நெருக்கமாக இருந்தபடியே, அந்த பெண்ணின் கணவனுக்கு வீடியோ கால் செய்து, “இப்ப நானும் உன் மனைவியும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்” என்று கூறி, இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனை வீடியோவில் பார்த்த அவர் இன்னும் கடுமையாக அதிர்ச்சி அடைந்த நிலையில், தனது மனைவிக்கு பணம் அனுப்புவதை அதன் பிறகு, அந்த கணவன் நிறுத்தி விட்டார்.

இதானல், வீட்டு செலவுக்கு “ஏற்கனவே பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்து வந்த நிலையில், அந்த வட்டிப் பணத்தை வசூல் செய்ய” பரஹான் தொடங்கி உள்ளார்.

அப்போது, தனக்கு வர வேண்டிய பணத்தை வசூலிப்பதில் பரஹானுக்கு தடையும் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது, பணம் வாங்கிய பலரும், அந்த பெண்ணுக்கு பணத்தை திருப்பித்தர மறுத்து விட்டனர். 

இதனால், பணத்தை திருப்பி கொடுக்காதவர்கள் மீது, அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து, அடிக்கடி அந்த பெண் காவல் நிலையம் சென்று வந்த நிலையில், அங்குள்ள ஒரு போலீசாருடன் அந்த பெண்ணுக்கு மீண்டும் ஒரு கள்ளக் காதல் உறவு ஏற்பட்டிருக்கிறது.

இதே நேரத்தில், கள்ளக் காதலன் பாஷா, “தனது காதலி பராஹானுடன், அந்த போலீசாருக்கும் இடையே கள்ளக் காதல் உறவு இருப்பதாக” கூறி, ஒரு புதிய பிரச்சினையை கிளப்பி இருக்கிறார். இதனால், அந்த பழைய கள்ளக் காதலர்களுக்கு இடையே பெரும் சண்டை வந்துள்ளது.

இந்த சூழலில் தான், அந்த பெண் பராஹான் சந்தேகமான முறையில் ரத்த வெள்ளத்தில் அந்த பகுதியில் உயிரிழந்து சடலமாக கிடந்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “அந்த பெண் பராஹான், தனது கள்ளக் காதலன் பாஷாவால் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம்?” என்று சந்தேகம் வந்து உள்ளதாக கூறியுள்ளனர். எனினும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Comment