கொரோனா வைரஸ் பற்றிப் பரப்பப்பட்டு வரும் வதந்தி மற்றும் உண்மை பற்றி தற்போது பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்தியும், உண்மையும் இணையத்தில் உலா வருகின்றன. உண்மையைப் பலரும் பின்பற்றி வரும் நிலையில், சில வதந்திகளைப் பார்த்து, பலரும் இன்னும் பீதியடைந்துள்ளனர்.

இதனால், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் கொரோனா பற்றிய செய்திகளில் எது வதந்தி? எது உண்மை? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்...

வதந்தி

- கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரணம் நிச்சயம்.

- வயதானவர்களை மட்டுமே தாக்கும்.

- மற்ற நோய்களுக்கு மருத்து மாத்திரை சாப்பிடுபவர்களையும் கொரோனா தாக்கும்.

- முககவசம் அணிவது கொரோனாவை தடுக்கும்.

- கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவுகிறது.

உண்மை

- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே உயிரிழக்க வாய்ப்பு.

- வயது வித்தியாசம் இன்றி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களையும் தாக்கும்.

- சர்க்கரை நோய், சுவாச கோளாறு மற்றும் இதயகோளாறு உள்ளவர்களையும் கோரோனா எளிதில் தாக்கும்.

- முககவசம் அணிவது என்பது, வைரசை மற்றவர்களுக்குப் பரவாமல் மட்டுமே தடுக்கும்.

- கோழி மற்றும் மீன் இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.