கள்ளக் காதலிக்காக மனைவியைக் கொன்ற ராணுவ வீரர் உட்பட, அவரது குடும்பத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனுார் ஜெயம் நகரைச் சேர்ந்த முனீ்ஸ்வரன் - சுப்புலட்சுமி தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

முனீஸ்வரன், புனேவில் ராணுவத்தில் பணியாற்றிய வரும் நிலையில், அங்குள்ள ராணுவக் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

Indian army man kills theni wife for affair

இதனிடையே, முனீஸ்வரனுக்கு அங்குள்ள மற்றொரு ராணுவ வீரரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத் தொடர்பாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த விசயம் சுப்புலட்சுமிக்கு தெரியவர, அவர் கணவர் முனீஸ்வரனை கண்டித்துள்ளார். இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையே தினமும் சண்டை வந்துள்ளது.

இதனால், கள்ளக் காதலைத் தொடர முடியாமல் தவித்த முனீஸ்வரன், மனைவியையும் குழந்தைகளும் தேனிக்கே அனுப்பி உள்ளார்.

தேனி மாவட்டம் போடியில் கணவர் வீட்டில் சுப்புலட்சுமி குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் மாமனார், மாமியாரிடம் கணவரின் கள்ளக் காதல் குறித்துக் கூறியுள்ளார். ஆனால், இதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

மேலும், மாமியர் மற்றும் அவரது குடும்பத்தினர் சுப்புலட்சுமியை கடுமையாகச் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட, பணம் அனுப்புவதை முனீஸ்வரன் நிறுத்தி உள்ளார்.

இதனால், குடும்பச் செலவிற்குக் கூட பணம் இல்லாமல் தவித்த சுப்புலட்சுமி, கிராமத்தில் 100 நாள் வேலைக்குச் சென்று, தன் குழந்தைகளைப் படிக்க வைத்து வந்தார்.

Indian army man kills theni wife for affair

இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த முனீஸ்வரன், மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். இதில், முனீஸ்வரன் தாக்கியதில் சுப்புலட்சுமி மயங்கி விழுந்துள்ளார். 

இதனையடுத்து, சுப்புலட்சுமியை முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு, நாடகம் ஆடி உள்ளனர்.

இந்த தகவல், கேள்விப்பட்டு சுப்புலட்சுமியின் பெற்றோர், மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், முனீஸ்வரன் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்துள்ளனர். அதில், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முனீஸ்வரனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, மனைவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, சுப்புலட்சுமி கொலை வழக்கில், உடந்தையாக இருந்த முனீஸ்வரனின் அப்பா ராஜு, அம்மா செல்வி, தம்பி சதீஷ்குமார், சித்தி அன்னலட்சுமி, அன்னலட்சுமியின் மகன் பாலமுனீஸ்வரன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தப்பியோடிய முனீஸ்வரனின் மற்றொரு சகோதரர் ராஜசேகரனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, தேனியில் கள்ளக்காதலிக்காக ராணுவ வீரர் ஒருவர், தன் மனைவியைக் கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.