துபாயில் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த காதலியை, இந்தியக் காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துபாயில் பணியாற்றி வந்த 27 வயதான இந்திய இளைஞன் ஒருவன், அங்கு பணியாற்றி வந்த இந்தியப் பெண்ணை கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்.

Dubai woman killed by Indian for affair

இருவரும் நெருங்கிப் பழகிக் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெளியிடங்களுக்குத் தனிமையில் சுற்றித் திருந்து வந்தனர்.

இதனிடையே, அந்த பெண்ணுக்குப் பிற ஆண்களுடன் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கேள்விப்பட்ட அந்த இளைஞன், அங்குள்ள ஒரு பிரபலமான மால் ஒன்றின் கார் பார்க்கிங்கில் அமர்ந்து, தன் காதலியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளான்.

இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட காதலியை, காரின் முன் இருக்கையில் அமர வைத்து, அருகில் உள்ள உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, சுமார் 45 நிமிடங்கள் துபாய் நகரைச் சுற்றி வலம் வந்துள்ளார்.

மேலும், பெண்ணின் பெற்றோருக்கு மெயில் அனுப்பி, “எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த இளைஞன் அங்குள்ள போலீசில் சரணடைந்தான். பின்னர், உடலை மீட்ட போலீசார், காதலனிடம் விசாரணை மேற்கொண்டு, சிறையில் அடைத்தனர்.