“கொரோனாவை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

- பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

- பொது இடங்கள், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கூடுவதை, அடுத்த 15 நாட்களுக்கு அனைவரும் தவிர்க்க வேண்டும்.

- கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

TN govt coronavirus safety measures

- வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக வளாகங்கள், திருமண விழாக்கள், இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

- தனி மனித சுகாதாரத்திற்கு அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

- பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேண வேண்டும்.

- அனைவரும் வீட்டிற்குள் நுழையும் போதும், கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி செய்வதும் நலம்.

- கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம்.

- பெற்றோர் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடாதபடி கண்காணிக்க வேண்டும்.

- குழந்தைகள் விளாயாடிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை, பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

- அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்கள், பாதுகாப்பு கருதி தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைப்படுத்திக் கொண்ட பின், செல்ல வேண்டும்.

- சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

- கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி, உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

TN govt coronavirus safety measures

- நோய்க்கான அறிகுறி உள்ள பொதுமக்கள், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

- கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்துகொள்ள சுகாதாரத்துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை எண்கள் 104, 044 29510400, 044 29510500, 94443 40496 மற்றும் 87544 48477 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலால்.

- கொரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.