“அடிக்கடி உடலுறவு கொண்டால்.. கொரோனா வைரஸ் செத்துவிடும்” என்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான '50 சென்ட்' என்கிற கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்சன், கொரோனாவிலிருந்து மக்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காமெடி கலந்த நகைச்சுவை வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

50 cent rapper says constant sex cures corona

அதில், “ ஒரு பிரபலமான ஆங்கி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் ஒரு காட்சியைச் சுட்டிக்காட்டுகிறார். அதில், “அடிக்கடி உடலுறவு கொண்டால்.. கொரோனா வைரஸ் செத்துவிடும்” என்ற செய்தி ஒளிபரப்பாகிறது.

இதை சுட்டிக்காட்டிப் பேசிய '50 சென்ட்', இது சமூக ஊடகங்களில் மிகப் பெரிய விவாத பொருளாக இருக்கப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

50 cent rapper says constant sex cures corona

மேலும், அதைச் சுட்டிக்காட்டி “ஓ அப்படியா, இனி நாங்கள் நன்றாக இப்படியே தான் இருக்கப் போகிறோம். எங்கள் வேலையை நாங்கள் செய்யப்போகிறோம்” என்று கிண்டலாகப் பேசி உள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஏற்கனவே 2 செக்ஸ் சாதனங்கள் அடங்கிய படங்களைப் பகிர்ந்த ஒரு இளைஞனுக்கு, இந்த பதிவைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது, '50 சென்ட்' பகிர்ந்த இந்த விளையாட்டுத் தனமான வீடியோவும், “அடிக்கடி உடலுறவு கொண்டால்.. கொரோனா வைரஸ் செத்துவிடும்” என்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி கூறிய செய்தியும், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.