“ஹாரிபாட்டர்” படத்தில் வரும் பாதி கரடி, மீதி பன்றி உருவம் கொண்ட “டோபி உயிரினம்” கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு பிறகு மிருகக்காட்சிசாலையில் பிறந்து உள்ளது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுத்த “ஹாரிபாட்டர்” படம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ, அதே அளவுக்கு அந்த படத்தில் வந்த சில முக்கிய கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

அதன் படி, “ஹாரிபாட்டர்” படத்தில் வரும் பாதி கரடி, மீதி பன்றி உருவம் கொண்ட “டோபி உயிரினம்” ரசிகர்களை அதிகம் கவர்ந்த விலங்கினமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான், இங்கிலாந்தில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில்,  “ஹாரிபாட்டர்” படத்தில் வருவதைப் போன்ற “டோபி உயிரினம்” கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக “ஆர்ட்வார்க் குட்டி” பிறந்து உள்ளது.

அதாவது, இங்கிலாந்தில் நாட்டில் உள்ள செஸயரில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் மிருகக்காட்சி சாலையில் தான், இந்த அரிய வகை விலங்கினம் பிறந்து உள்ளது. 

அதுவும், “ஹாரிபாட்டார்” படத்தில் வரும் “டோபி” என்னும் கதாபத்திரத்தை ஒத்திருப்பதால், தற்போது புதிதாக பிறந்துள்ள இந்த உயிரினத்திற்க்கு “டோபி” என்று பெயரிட்டு உள்ளதாக, விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதுவும், கடந்த ஜனவரி  4 ஆம் தேதி அன்று தான், இங்கிலாந்தில் நாட்டில் உள்ள செஸயரில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் இந்த “டோபி உயிரினம்” பிறந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, இதனை பராமரித்து வளர்ந்து வந்த அந்த உயிரியல் பூங்கானர், கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக் கிழமை இதன் “பாலினம் பெண்” என்று, உறுதி செய்து உள்ளனர். 

இதனையடுத்து, அந்த மிருகக்காட்சி சாலை ஆக்வார்ட்டின் படங்களை சமூக ஊடகங்களில் தற்போது பகிர்ந்து உள்ளது.

மேலும், “இந்த உயிரினம் மிருகக்காட்சி சாலையில் பிறந்த முதல் ஆர்ட்வார்க் என்பதால், இது எங்களின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான மைல்” என்றே, மிருகக்காட்சி சாலையின் மேலாளர் டேவ் டைவ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, இந்த வகையான உயிரினமானது, அதிகமாக ஆப்பிரிக்காவின் சஹானா பகுதியில் அதிகம் காணப்படுவதாகவும், அங்கு விவசாய வளர்ச்சியினாலும் மற்ற விலங்குகள் வேட்டையாடுவதாலும் இது அழியும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, உலகம் முழுவதும் உள்ள மிருகக்காட்சி சாலைகளில் 109 ஆர்ட்வார்க் உள்ளது என்றும், அதில் 66 ஆர்ட்வார்க் ஐரோப்பாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மட்டுமே இருப்பதாகவும்” கூறப்படுகின்றன.