கோலாகலமாக நடைபெற்ற தயாரிப்பாளர் GN அன்புச்செழியன் மகள் திருமணம்!
By Anand S | Galatta | February 21, 2022 15:28 PM IST

தமிழ் திரை உலகில் முன்னணி சினிமா பைனான்சியராகவும், பிரபல தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையரங்கு அதிபராகவும் திகழ்பவர் G.N.அன்புச்செழியன். தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களை தயாரித்துள்ள G.N.அன்புச்செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பாக வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி ரிலீசாக உள்ள அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான சுஷ்மிதா அவர்களுக்கும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் மைத்துனரும் குடிமையியல் தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் SUN IAS அகாடமியின் நிறுவனருமான ராஜேந்திரன் IAS-ன் மகனான சரண் அவர்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தயாரிப்பாளர் அன்புச்செழியன் இல்லத் திருமணம் கோலாகலமாக இன்று (பிப்ரவரி 21) நடைபெற்றது. கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்போடு நடைபெற்ற இந்த திருமணத்தில் பல அரசியல் தலைவர்களும், அரசு உயர் அதிகாரிகளும், திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, நடிகர் நாசர், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்தில் முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட திருமண வீடியோ தற்போது நமது கலாட்டா சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…