இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவரான  வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில்  தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன

முன்னதாக கீர்த்தி நடிப்பில் இந்த ஆண்டு(2022) வெளிவந்த திரைப்படம் குட் லக் சகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து முதல்முறை இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கியுள்ள சாணிக் காயிதம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகரான  மகேஷ்பாபு நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கும் போல ஷங்கர் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள வாஷி படமும் விரைவில் வெளிவரவுள்ளது. 

இதனிடையே முன்னணி நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள காந்தாரி மியூசிக் வீடியோ தயாராகியுள்ளது. பிருந்தா மாஸ்டரின் நடன இயக்கத்தில் பவன்.CH இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள காந்தாரி பாடலுக்கு கோபி கிருஷ்ணன்-ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

தி ரூட் மற்றும் சோனி மியூசிக் இணைந்து வழங்கும் காந்தாரி தெலுங்கு பாடலை சுத்தலா அசோக் தேஜா எழுத, அனன்யா பட் பாடியுள்ளார்.  இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில் வெளிவந்துள்ள காந்தாரி மியூசிக் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கலக்கலான அந்த வீடியோ இதோ...