கோகுல் ராஜ் கொலை வழக்கு.. ஆயுள் தண்டனை கைதி பத்து பேர் மேல்முறையீடு!

கோகுல் ராஜ் கொலை வழக்கு.. ஆயுள் தண்டனை கைதி பத்து பேர் மேல்முறையீடு! - Daily news

கோகுல் ராஜ் கொலை வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடர்பாக 550 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ்,  அருண் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் CBCID க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல் ராஜ். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து அவர் 11.10.2015 அன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ம் தேதி விசாரணையும் நடைபெற்றது.

மேலும் இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5-ம்  தேதி முதல் மதுரை எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல் ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனா் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள்  தண்டனைகள் விதித்து மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் வன்கொடுமை சிறப்பு  நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி அன்று தீர்ப்பு விவரம் வழங்கியது. முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  மற்ற குற்றவாளிகளில் அருண்,  குமாா்,  சதீஷ்குமாா்,  ரகு,  ரஞ்சித்,  செல்வராஜ் ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டது.

மேலும், சந்திரசேகரன் , பிரபு மற்றும் கிரிதா் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை  வழங்கப்பட்டது. இதில் பிரபு மற்றும் கிரிதா் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையோடு மேலும்  5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா்கள் அனைவரும் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கோலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட , சேலம் சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ், ,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு/23/06/2015-ல் கோகுல் ராஜ் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை நாமக்கல் CBCID போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கு முதலில் நாமக்கல் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, முன் விசாரணைக்கு வந்தது. அதன் பிறகு, மதுரை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணை நடை பெற்று 08/03/22 அன்று எனக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மதுரைமாவட்ட கூடுதல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தால் எனக்கு  வழங்கப்பட்ட 3 ஆயுள்  தண்டனையை எதிர்த்து  நான் மேல்முறையீட்டு  மனு தாக்கல் செய்துள்ளேன் . மேல் முறையீட்டு மனு தாக்கல்  செய்வதற்கான போதிய முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரணை நடை பெற்றது. வழக்கு தொடர்பாக  550 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.  இதில் அனைத்தும் பிறழ் சாட்சிகளாக மாறின. உறுதி செய்யப்படவில்லை . கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு  எதிரானது. மற்றும் சமத்துவம்,மனசாட்சிக்கு எதிரானது.

முழு வழக்கும் சூழ்நிலை சாட்சியத்தின் அடிப்படையில் உள்ளது. தண்டனை வழங்குவதற்கு முன், சந்தேகம் இன்றி  குற்றம் நிருபிக்கப்படவில்லை . 4 சூழ்நிலை சாட்சிகளை கொண்டு  ஆதரங்களாக  (evidence) தயார் செய்து தண்டனை வழங்கி உள்ளனர்.
1) உள்நோக்கம்,
2) கடைசியாகப் பார்த்த கோட்பாடு   (CCTV காட்சிகள்),
3) குற்றஞ்சாட்டப்பட்ட கூடுதல் நீதித்துறை வாக்குமூலம் (யுவராஜ் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி)
4) தலைமறைவாக இருந்தது. இவற்றை ஆதரமாக கொண்டு தண்டனை வழங்கி உள்ளனர்.

சந்தேகம் இன்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை. முழு வழக்கும் பிரதானமாக 4  சூழ்நிலை சாட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட வில்லை. முக்கியமாக, கோகுல் ராஜை  கடத்தி சென்றனர்  என கூறிய,  உடன் இருந்த அந்த. பெண் (சுவாதி) நேரில் பார்த்த சாட்சி,   பிறழ் சாட்சியாக மாறினார். பிரதான சாட்சியமாக உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்  கோவில் CCTV  காட்சிகளில் , கோகுல்ராஜ்  மற்றும் அந்த பெண் (PW4  அந்த பெண் சுவாதி) கோவிலில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளிவருகின்றனர்.  கடத்தப்பட்டதாகக் கூறப்படும்  குற்றசாட்டுக்கு  எந்தவிதமான காட்சிகளும் இல்லை.

சில வினாடிகளுக்குப் பிறகு  அந்த பெண் சுவாதி மற்றும் தற்போது  குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேரை தவிர , மற்றவர்கள் மற்றும்   கோகுல்ராஜ் ஆகியோர் கோவிலுக்குள் மீண்டும் ஒருவர் பின் ஒருவராக செல்கின்றனர். இந்த CCTV காட்சிகளை  தவிர, கோகுல்ராஜை  கொலை செய்தது  மற்றும் ரயில் பாதையில் கோகுல்ராஜ் உடலை கிடத்தியதற்கான எந்த சாட்சியும்,  ஆதாரமும் இல்லை.பிரதான ஆதாரமாக உள்ள  அர்த்தநாரீஸ்வரர் கோவில்  CCTV காட்சி முற்றிலும் பொய்யானது . மேலும் இந்த வழக்கு விசாரணையில் முக்கியமாக ஊடக அழுத்தம் (MEDIA TRIAL) வழக்கில் ஆதிக்கம் செலுத்தியது. CCTV  காட்சிகள் மற்றும் பிற மின்னணு ஆவணங்கள் தொடர்பான நிபுணர்களின் சான்றுகளை  கொண்டு வழக்கில் தண்டனை வழங்க வழிவகுத்து உள்ளது. அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட  சாட்சியங்களில்  கூட, பெரும்பாலான ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  சட்டபடி , எந்த ஆதாரப்பூர்வமான முகாந்திரம் இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் நபர். மற்றும் BCS பட்டதாரி மற்றும் தொழில் செய்து வந்தேன்.

சட்டத்தின் பிடியில் இருந்து நான் தலைமறைவாக மாட்டேன் .நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு  கட்டுப்படுவேன்.கடந்த 25.08.2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை  நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்து வருகிறேன். எனவே சேலம் ஓமலூர் கல்லூரி  08/03/2022 அன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் எனக்கு வழங்கிய 3 ஆயுள் தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் ,மேல் முறையீட்டு வழக்கு முடிவடையும் வரை எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இதே போல் , தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி,  இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அருண், குமாா், சதீஷ்குமாா், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 6 பேரும்,  மேலும் தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட , சந்திரசேகரன் ,பிரபு மற்றும் கிரிதா் ஆகிய3 பேரும்  தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், மேல் முறையீட்டு வழக்கு முடிவடையும் வரை ஜாமின் வழங்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன்,  சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட CBCID ASP,  CBCID இன்ஸ்பெக்டர், கோகுல்ராஜின் தாய் சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.  இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Comment