“2021 ல் இனி என்னெல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா?” என்று, பாபா வங்கா என்ற மூதாட்டி கணித்துக் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த உலகத்தில் சிலருக்கு மட்டும் தான், எதிர் காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிய வரும். இது போன்ற சம்பவங்களை நாம் அதிகம் சினிமாவில் பார்த்தது உண்டு. ஆனால், அப்படி எதிர் காலத்தில் நடப்பதை நிகழ்காலத்தைக் கணித்துச் சொன்னவர்கள் என்று நாம் வாழும் பொழுதே வாழ்கிறார்கள் என்பது எவ்வளவு ஒரு ஆச்சரியமான விசயம். 

அப்படி ஒரு ஆச்சரியமான மனிதர் தான், பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பெண்மணி இன்று, நாம் வாழும் இதே காலகட்டத்தில் வாழ்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். தற்போது, அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவர் இருக்கும் போது, இந்த உலகத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கணித்துக் கூறிய விசயங்கள் எல்லாம், ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவது தான் மிகவும் வியப்பாக இருக்கிறது. 

அதாவது, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி, கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் உயிரிழந்தார். 

பாபா வங்கா, தனது 12 வயது வரை மிகவும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்தார். ஆனால், அதன் பிறகுத் தனது பார்வை திறனில் குறைபாடு ஏற்பட்டு முற்றிலுமாக பார்வையை அவர் இழந்து போனார். இவர் இறப்பதற்கு முன்பே இந்த உலகில் நாளை வர இருக்கும் எதிர் காலம் குறித்த பல தகவல்களையும், அவர் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் அந்த கண் பார்வை இழந்த மூதாட்டி.

முக்கியமாக, சீனா நாட்டில் பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தொற்று, இன்றைய நாளில் உலக நாடுகளில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பரவி, அது 2 வது அலையும் வீசிவிட்டு, தற்போது புதிய வகை கொரோனா வைரஸ்களாக உருமாற்றம் கொண்டிருக்கின்றன. 

அதே நேரத்தில், இன்னும் நில தினங்களில் இந்த உலகே புதிய ஆண்டை வரவேற்கக் காத்திருக்கிறது. புதிதாகப் பிறக்க உள்ள 2021 ஆம் ஆண்டாவது சிறப்பாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்த பாபா வங்கா, 2021 ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்பது குறித்தும், அவர் முன்பே தெரிவித்திருக்கிறார். தற்போது, அது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இப்படியாக, பாபா வங்கா உயிரோடு இருக்கும் போது கூறிய பல சம்பவங்கள், அவர் இறந்த பிறகு பல நடந்திருக்கின்றன. 

உதாரணமாக, அமெரிக்காவில் அமைந்துள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என அவர் முன் கூட்டியே கூறியிருந்தார். அது போலவே, அந்த சம்பவம் நடந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. 

அத்துடன், அமெரிக்காவின் 44 வது அதிபராக கருப்பினத்தவர் ஒருவர் பதவியேற்பார் என தெரிவித்திருந்தார். அதன் படியே, அப்படியே நடந்தது. இப்படி பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ள பல விசயங்கள் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு நிஜத்தில் நடந்து உள்ளது.

இந்நிலையில், இன்னும் ஒரு வார காலத்திற்குள் புதிதாகப் பிறக்க உள்ள 2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் பாபா வங்கா சில விஷயங்களை முன் கூட்டியே கணித்து உள்ளார். 

அதன் படி, வரும் 2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளைச் சந்திக்க இருப்பதாக அவர் கணித்துள்ளார்.

மேலும், புற்று நோய்க்கான தீர்வு கிடைக்கும் என்றும், அவர் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். 

அத்துடன், 45 வது அமெரிக்க அதிபராக வருபவர், மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும், இந்த நோயின் காரணமாக அவருக்குக் காது கேட்காமலும், மூளை பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டு பாதிப்படைவார் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதன் படி, தற்போது 45 வது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருந்தது. பின்னர், அதிலிருந்து அவர் குணமடைந்தார்.

முக்கியமாக, ஐரோப்பா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடையும் என்றும், ஐரோப்பாவில் தீவிரவாதிகள் ஏதேனும் சதி வேலைகளைச் செய்யக் கூடும் என்றும் அவர் கணித்திருந்தார். 

மிக முக்கியமாக, ரஷ்ய அதிபர் புதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஒன்று அவரது நாட்டிலிருந்தே வரக்கூடும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

அதே போல், அடுத்து வரும் 200 ஆண்டுகளில் மனிதர்கள், ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள் என்றும், இந்த உலகம் எப்படித் தோன்றியது என்று அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்றும், மக்கள் அனைவரும் வேறு உலகங்களிலுள்ள தங்களின் ஆன்மீக உடன் பிறப்புகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, எதிர் காலத்தில் ஒரு வலிமையான டிராகன் ஒட்டு மொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என்றும், அதில் மூன்று ராட்சதர்கள் ஒன்று கூடுவர் என்றும், அதில் சில பேரிடம் சிவப்பு பணம் இருக்கும் என்றும், அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். 

இதனிடையே, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி, வர இருக்கும் 2021 ஆம் ஆண்டில் நிகழ உள்ள சம்பவங்கள் குறித்தும், அடுத்த நூற்றாண்டு குறித்தும், முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளது உலக நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.