நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் தனது வாழ்க்கையை தொடங்கி தமிழ்,தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அவதரித்துள்ளவர் தீப்ஷிகா.ரேணிகுண்டா,கறுப்பன் பட இயக்குனர் இயக்கும் புது படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தீப்ஷிகா.இதனை அடுத்து Potential ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முதல் படம் வெளிவரும் முன்னரே தமிழில் 3,தெலுங்கில் 3 படம் என கமிட் ஆகி படு பிஸியாக ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.இதனை தவிர வைரமுத்துவின் ஆல்பம் பாடல் ஒன்றிலும் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வெகு விரைவாக அவதரித்துள்ள்ளார் தீப்ஷிகா.தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ராவண கல்யாணம் படத்தில் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார் தீப்ஷிகா.பாபி சிம்ஹா,சந்தீப் மாதவ் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.இதில் சந்தீப் மாதாவிற்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.மற்றொரு ஹீரோயினாக ரீது காயத்ரி நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் மது கிரண் இந்த படத்தினை இயக்குகிறார்.ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட Pan Indian படமாக தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது.இந்த பட பூஜையில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.