கடந்த 2016-ம் ஆண்டு கவலை வேண்டாம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யாஷிகா அனந்த். அதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 

அந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. உலகளவில் யாஷிகாவிற்கென ரசிகர் பட்டாளம் துவங்கியது. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு பல திரைப்படங்களில் கமிட்டானார் யாஷிகா. கழுகு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடனமாடினார். அதன் பிறகு ஜாம்பி என்ற படத்தில் நடித்தார். 

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் லாக் டவுனில் திருமணம் செய்து கொண்டார் என கூறி சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. அந்த புகைப்படங்களில் யாஷிகா நெற்றியில் குங்குமம் வைத்திருந்தது தான் இப்படி ஒரு செய்தி காட்டு தீ போல் பரவுவதற்கு காரணம். 

யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், நெற்றியில் குங்குமத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அதற்கு பிறகு அவர் பகிர்ந்த ஒரு பதிவில், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என தெளிவு படுத்தியுள்ளார் நடிகை யாஷிகா. 

மஹத் ஜோடியாக இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படம் துவங்கி நீண்ட கால் ஆகி விட்ட நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆரவ் நடிக்கும் ராஜபீமா திரைப்படம். அது மட்டுமின்றி சில டிவி நிகழ்ச்சிகளிலும் யாஷிகா பங்கேற்று வருகிறார். விஜய் டிவி காமெடி ஷோ ஒன்றில் நடுவராகவும் யாஷிகா செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லாக்டவுனில் சீரியலிலும் கால் பதித்தார் யாஷிகா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mua @artistrybyolivia 😍 Hair @jayashree_hairstylist 😍 Photo courtesy @sarancapture 😍 Ps - I’m not married guys ! Just for the shoot 🙏

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛🧿 (@yashikaaannand) on