தந்தையை விட அதிகம் வயதுடைய 59 வயது நடிகரை, காதலித்து வந்த 28 வயது நடிகை, அவரை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 59 வயதான ஹாலிவுட் நடிகர் சீன் பென் என்பவர், ஏற்கனவே 2 திருமணங்கள் செய்துள்ளார். இவருக்குக் குழந்தைகளும் உள்ளன.

ஹாலிவுட் நடிகர் சீன் பென், சமீபத்தில் நடித்த “மிஸ்டிக் ரிவர்” மற்றம் “மில்க்” போன்ற திரைப்படங்கள், ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், ஹாலிவுட் நடிகர் சீன் பென், இன்னும் புகழ் பெற்றார். “மிஸ்டிக் ரிவர்” மற்றம் “மில்க்” போன்ற படங்கள், அவருக்கு சில விருதுகளைப் பெற்றுத் தந்தது. அந்த அளவுக்கு அவர் நடிப்பில் தனது திறமையை நிறுபித்து இருப்பார்.

இந்நிலையில், அமெரிக்க நடிகர் வின்சென்ட் டி ஓனோப்ரியோ - ஆஸ்திலேலிய நடிகை கிரேட்டா ஸ்கேட்சி தம்பதியின் மகளான 28 வயதான லைலா ஜார்ஜ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு னை மணந்தார் 28 வயது நடிகை, நியூயார்க்கில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து வந்தார்.

படித்து முடித்ததும் லைலா ஜார்ஜ், நடிகையாக மாறினார். முக்கியமாக, தன் தாயுடன் சேர்ந்து ஆன்டன் செகாவ்வின் நாடகத்திலும் அவர் நடித்திருந்தார். மேலும், சமூகச் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவையில் அதிகம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்தார்.

அப்போது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை லைலா ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் சீன் பென்னை சந்தித்துள்ளார். முதலில் இவர்கள் நட்பாக பழகி வந்ததாகக் கூறப்பட்டது.

அதன் பிறகு, அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது. அத்துடன், தந்தையை விட அதிகம் வயதுடைய 59 வயது நடிகர் சீன் பென்னும், 28 வயது நடிகை லைலா ஜார்ஜ் ஆகிய இருவரும் ஜோடியாகச் சுற்றித் திரிவதாகவும், அமெரிக்க ஊடகங்கள் சில போட்டோக்களையும் வெளியிட்டு வந்தது. 

இது தொடர்பாக இருவரும் எந்த கருத்தும் கூறாமல் இருந்த வந்த நிலையில், 59 வயதான ஹாலிவுட் நடிகர் சீன் பென், தற்போது 28 வயது நடிகை லைலா ஜார்ஜ்ஜை 3 வதாக திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த தகவலை, ஹாலிவுட் நடிகர் சீன் பென்னின் நெருங்கிய நண்பர் ஒருவர், தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் இருவரும் 4 வருடங்களாகக் காதலித்து வந்ததாகவும், தற்போது ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நடிகர் சீன் பென் - நடிகை லைலா ஜார்ஜ் திருமண தொடர்பான செய்தி, ஹாலிவுட் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.