புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியின் ஆபாசப் படம் எடுத்து, அவரது தயாரை மிரட்டி வந்த இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த சிறுமியின் உறவுக்காரரின் மகன் முருகன் என்ற இளைஞன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.அப்போது, சிறுமியின் பெற்றோரும், நமது உறவினரின் மகன் தானே என்ற நம்பி வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு, முருகன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான்.

ஒரு கட்டத்தில், சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோர் வேலைக்குச் சென்றுவிடவே, சிறுமியிடம் முருகன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

மேலும், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், காதலிப்பதாகவும் கூறி, சிறுமியை மயக்கி அவரிடம் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

அத்துடன், சிறுமியுடன் உல்லாசமாக இருக்கும் போது, சிறுமிக்கேத் தெரியாமல், அவரை ஆபாசமாகத் தனது செல்போனில் முருகன் படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்து சில நாட்களில், சிறுமியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டவே, சிறுமியை முருகனைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞன், சிறுமியின் தாயாரிடம் சென்று, சிறுமியுடன் உல்லாசமாக இருக்கும் படத்தைக் காட்டியும், சிறுமி மட்டுமே இருக்கும் ஆபாசப் படத்தையும் காட்டி உள்ளார். மேலும், “சிறுமியை எனக்கே திருமணம் செய்து தரும்படியும், இல்லையென்றால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும்” என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அந்த இளைஞன் தன்னை மிரட்டுவது குறித்தும், தன்னுடைய மகளின் ஆபாசப் படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டுவது குறித்தும், அந்த இளைஞன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் போலீசார், முருகனை கைது செய்தனர்.

இதனையடுத்து, முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், சிறுமியை ஆபாசமாகப் படம் எடுக்கப் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு, முருகனை சிறையில் அடைத்தனர்.

மேலும், விசாரணைக்காக 3 நாட்கள் முருகனை நீதிமன்ற காவலில் எடுத்துள்ள போலீசார், அவருக்கு கொரோனா இருக்கிறதா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், சிறுமியை ஆபாசப் படம் எடுத்து, வேறு யாருக்கேனும் அனுப்பி வைத்துள்ளாரா என்றும், அந்த படத்தை வேறு எங்கேனும் சேமித்து வைத்துள்ளாரா என்றும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.