இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் நானி உடன் தசரா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் வேதாளம் படத்தின் ரீமேக்காக தயாராகும் போலா ஷங்கர், ஜெயம் ரவியுடன் இணைந்து தமிழில் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஃபகத் பாஸில் வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் DPயாக வைத்திருந்த கர்நாடக மாநிலத்தை மஞ்சுளா என்ற பெண் ஒருவர் நூதன முறையில் இளைஞர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை DPயில் வைத்துள்ள இந்தப் பெண் கல்லூரி படிக்கும் மாணவியாக தன்னை சித்தரித்து பல ஆண்களுக்கு FRIEND REQUEST கொடுத்து அதில் சிக்கும் ஆண்களிடம் பேசி அவரது வலையில் சிக்க வைத்து பணம் பறித்துள்ளார். 

அந்த வகையில் சிக்கியவர் தான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பரசுராமன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பரசுராமன் DPயை பார்த்து அழகான பெண் என மயங்கி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் இருப்பது கீர்த்தி சுரேஷ் என்பது கூட தெரியாத அந்த நபர் மஞ்சுளா வீசிய மோகவலையில் சிக்கி தனது 40 லட்சம் ரூபாயை பறி கொடுத்துள்ளார். 

மோசடியில் ஈடுபட்ட இந்த மஞ்சுளா என்ற பெண் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமன் கொடுத்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீசார் மஞ்சுளாவை கைது செய்துள்ள நிலையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மஞ்சுளாவின் கணவர் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

உஷார் ஐயா உஷாரு 🥺 கீர்த்தி சுரேஷின் போட்டோவை வைத்து நூதன திருட்டு..!#GalattaNews 📢 #KeerthySuresh #Facebook #Scam #Blackmails #Karnataka pic.twitter.com/bXazBQBkU1

— Galatta Media (@galattadotcom) December 2, 2022