தனக்கே உரித்தான பாணியில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அந்த வகையில் தற்போது தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தொடர்ந்து சந்திப் கிஷன் நடிப்பில் PAN INDIA படமாக தயாராகி வரும் மைக்கேல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தற்போது கவனம் செலுத்து வரும் விஜய் சேதுபதி இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். முன்னதாக ஃபேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கத்தில் தயாராகியுள்ள FARZI எனும் ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்துள்ள விஜய் சேதுபதி, மௌன படமாக தயாராகும் காந்தி டாக்ஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கர், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள DSP திரைப்படம் இன்று டிசம்பர் மாதம் 2ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய் சேதுபதியுடன் இணைந்து அணுக்ரீத்தி வாஸ் கதாநாயகியாக நடிக்க, ஷிவானி நாராயணன் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் DSP திரைப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் மற்றும் வெங்கடேஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, D.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் DSP படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. DSP படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ…