தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய திரை உலகின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகிறது.

இதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மீண்டும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் தளபதி விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டில்(2022) தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு வெளியிட ரிலீஸான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிய போதும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. குறிப்பாக பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் மொழிகளை கடந்து அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபலமான SPOTIFY-ல் இந்த ஆண்டு(2022) அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களின் பட்டியலில் அரபிக் குத்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Ruling playlists like a BOSS!🔥 #ArabicKuthu @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @jonitamusic #Beast pic.twitter.com/CKV0tWIZdX

— Sun Pictures (@sunpictures) December 2, 2022