அதிரடி ஆக்சன் கதாநாயகனாக தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கேங்ஸ்டர் படமாக தயாராகும் மார்க் ஆண்டனி படத்தில் S.J.சூர்யா மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்ததாக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி.

மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்க,இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் சண்டை காட்சியில் நடித்து வந்த விஷால் காயமடைந்தார். இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Actor @VishalKOfficial On Special Coverage Of @AnandaVikatan #LaththiCharge Movie Special Edition Shooting Spot Stills@RanaProduction0@actorramanaa @nandaa_actor @dir_vinothkumar @TheSunainaa @balasubramaniem @thisisysr @PeterHeinOffl @HariKr_official @johnsoncinepro #Vishal pic.twitter.com/Y6LHVv9TPw

— RANA PRODUCTIONS (@RanaProduction0) July 7, 2022

Actor @VishalKOfficial On Special Coverage Of @AnandaVikatan #LaththiCharge Movie Special Edition Shooting Spot Stills@RanaProduction0@actorramanaa @nandaa_actor @dir_vinothkumar @TheSunainaa @balasubramaniem @thisisysr @PeterHeinOffl @HariKr_official @johnsoncinepro #Vishal pic.twitter.com/l8ap2Qne7K

— RANA PRODUCTIONS (@RanaProduction0) July 7, 2022

Actor @VishalKOfficial & Actress @TheSunainaa Pairing Up After 9 Years On #LaththiCharge Movie Shooting Spot Stills@RanaProduction0@actorramanaa @nandaa_actor @dir_vinothkumar @TheSunainaa @balasubramaniem @thisisysr @PeterHeinOffl @HariKr_official @johnsoncinepro #Vishal pic.twitter.com/HBuySewnw6

— RANA PRODUCTIONS (@RanaProduction0) July 7, 2022