தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரகளாக விளங்கும் இயக்குனர் ஜோடியான புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. நடிகர் மாதவன் விக்ரம் கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேதா கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராகவும் மிரட்டலாக நடிக்க  வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது விக்ரம் வேதா திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களாக சைஃப் அலிகான் விக்ரம் கதாபாத்திரத்திலும் ஹிரித்திக் ரோஷன் வேதா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹிந்தியிலும் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் உருவாகும் விக்ரம் வேதா படத்திற்கு PS வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம்வேதா ரீமேக் படத்தை Y NOT ஸ்டூடியோஸ் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளான் C ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

முன்னதாக சில வாரங்களுக்கு முன் ஹிரித்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் விதமாக வேதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள செயல்களில் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த போஸ்டர் இதோ…