90-களில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ரமணி vs  ரமணி இன்றும் பலரது ஃபேவரட் சீரியலாக யூட்யூபில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த ரமணி ரமணி சீரியலில் இதுவரை 2 பாகங்கள் வெளிவந்துள்ளன.

இதுவரையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரமணி vs ரமணி சீரியல் தற்போது OTT தளத்தில் ரிலீசாகிறது. பிரபல OTT தளமான aha தமிழ் OTT தளத்தில் ரிலீசாக உள்ள ரமணி vs ரமணி 3.O வெப்சீரிஸையும் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் நாகா 3வது பாகமான ரமணி vs ரமணி 3.O வெப்சீரிஸையும் இயக்குகிறார். 

சதீஷ் ஒளிப்பதிவில் ரெஹான் இசை அமைத்துள்ள ரமணி vs ரமணி 3.O வெப்சீரிஸுக்கு கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். முதல் பாகத்தில் ரமணி கதாபாத்திரத்தில் நடித்த வாசுகி ஆனந்தும் இரண்டாவது பாகத்தில் ரமணி கதாபாத்திரத்தில் நடித்த ராம்ஜியும் இணைந்து 3வது பாகத்தில் நடிக்க, மகள் ராகினி கதாபாத்திரத்தில் பொன்னி சுரேஷும் மகன் ராம் கதாபாத்திரத்தில் பரம் குகணேஷும் நடிக்கின்றனர். 

மேலும் பூவிலங்கு மோகன், வைத்தியநாதன் பத்மநாபன், கே.சத்தியமூர்த்தி, ஸ்ரீராம் கிரிஷ், சுசித்ரா ரவி, இலக்கிய, நர்மதா வேணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வருகிற மார்ச் 4ஆம் தேதி ரிலீசாக உள்ள ரமணி vs ரமணி 3.O வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது ரமணி vs ரமணி 3.O வெப்சீரிஸ் டீசர் வெளியானது.  கலக்கலான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.