இந்திய திரையுலகமே மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் நாளை (பிப்ரவரி 24ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார்.

முன்னதாக அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் அஜித்தின் அடுத்த திரைப்படமாக போனிகபூர் தயாரிக்கும் #AK61 திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் நடித்துள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  முன்னதாக வெளிவந்த வலிமை திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாய் எகிர வைத்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் ஸ்டன்ட் காட்சிகள் உருவான விதம் குறித்து வலிமை திரைப்படத்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகளில் பணியாற்றிய பைக் ஸ்டன்ட் கலைஞர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில பைக் ஸ்டண்ட்களை செய்து பகிர்ந்துள்ளனர். வலிமை படத்தின் ஓப்பனிங் காட்சியில் இருந்து அதிரடியான பைக் ஸ்டன்ட் காட்சிகள் வரை எவ்வாறு படமாக்கப்பட்டது எனவும்  அஜித் குமார் ஸ்டன்ட் காட்சிகளில் பணியாற்றியது குறித்தும், பைக் ஸ்டண்ட் கலைஞர்கள் பேசியுள்ள அந்த வீடியோ இதோ...