நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அஜித்குமாரின் வலிமை படம் இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சதுரங்கவேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று என தரமான படங்களை வழங்கி வரும் இயக்குனர் h.வினோத் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் மூலம் முதல்முறை அஜித்துடன் இணைந்து பணியாற்றினார்.

இதனை அடுத்து இரண்டாவது முறையாக அஜித்-H.வினோத் கூட்டணியில் உருவான வலிமை படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அஜீத் குமாருடன் இணைந்து ஹூமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக மிரட்டியுள்ளார். வழக்கம்போல் திரையரங்குகள் அனைத்தும் அஜித் ரசிகர்கள் நிரம்பி வழிய திருவிழாக்கோலம் கொண்டுள்ளது. எதிர்பார்த்தபடியே வலிமை திரைப்படத்தின் ஆக்ஷன் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கமான ரோகினி திரையரங்கில் வலிமை படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து வலிமை படத்தை பார்த்தனர். தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் கார்த்திகேயா மற்றும் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து வலிமை படம் பார்த்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…