தமிழ் சினிமாவின் மிக முக்கிய  இயக்குனர்களாக உயர்ந்திருக்கும் இயக்குனர்கள் ஜோடியான புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்று, சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட கடினமான நேரத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

ரிப்பீட் மொடில் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய விக்ரம் வேதா திரைப்படம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது. இதனையடுத்து பாலிவுட்டில் விக்ரம் வேதா திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்க, விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். 

மேலும் ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். PS.வினோத் ஒளிப்பதிவில், விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் பாடல்களுக்கு இசையமைக்க, சாம்.CS பின்னணி இசை சேர்த்துள்ளார். Y NOT ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் , Friday Filmworks மற்றும் T-Series Films இணைந்து விக்ரம் வேதா திரைப்படத்தை தயாரித்துள்ளன.

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி விக்ரம் வேதா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் முக்கியமான பாடலான கருப்பு வெள்ளை பாடலின் ஹிந்தி வெர்ஷனாக பண்டே விடியோ பாடல் தற்போது வெளியானது. அசத்தலான பண்டே விடியோ பாடல் இதோ…