கலையின் மீது கொண்ட தீராக் காதலால் ஒவ்வொருமுறையும் தனது திரைப்படங்களில் புதுமைகளை புகுத்தி ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் மகத்தான கலைஞனாய், கலைஞானியாய் விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம்.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

தடைகள் நீங்கி தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திருப்பதி சென்றுள்ள விமான நிலைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

ஆண்டவர் @ Tirupati 🔥💥#Indian2 shoot is currently progressing in Tirupathi..@Itsmytirupati @ikamalhaasan@shankarshanmugh pic.twitter.com/bRMoAmFuk8

— 𝙺𝙰𝚁𝚄.𝚅𝙸𝙹𝙰𝚈 🦁 (@Lion_Heart0) September 26, 2022