தமிழ் திரை உலகின் திரை வரலாற்றில் மாபெரும் மணி மகுடமாய் அமையவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி அவர்களின் வரலாற்றுப் புனைவு நாவலாக ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இரண்டு பாகங்களாக, தனது கனவு படமாக இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை செதுக்கியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனத்தின் தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரவிவர்மனின் ஒளிப்பதிவில் தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2வது பாகம் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது நந்தினி கதாபாத்திரத்தில் இருக்கும் ஐஸ்வர்யாராயுடன் சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் பார்த்திபன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இருக்கும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

ஐஸ் வாரியம் !

கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி
இப்பெண்ணிடமிருந்து…
தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்conti pic.twitter.com/QNegeqscST

— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022