இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதோடு தமிழக பாக்ஸ் ஆபீஸில் ஆல் டைம் ரெக்கார்ட் படைத்து வசூலில் 400 கோடியை நெருங்கி வருகிறது.

உலகநாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என் இயக்கத்தில் பக்காவான ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், செம்பன் வினோத், ஜாபர், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டீணா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வசந்தி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக காட்சிக்கு காட்சி ஸ்டண்ட்டில் அதிரடி காட்ட, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் அனிருத் இசையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் அனுபவத்தை விக்ரம் திரைப்படம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியின் காபி வித் DD நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட்பிரபுவிடம், கமல் ஹாசன் அவர்களை வைத்து  ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன படமாக இருக்கும் என DD கேட்க விக்ரம் 2 படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பழைய  வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ…

 

Unbelievable Appovey Sollirukkaru Venkatprabu #Vikram2 Pannanum nu @vp_offl Enna Sir Ivlo Advanced Ah Irukkinga 🔥🔥🔥@DhivyaDharshini @Premgiamaren @Aishwarya12dec @UVJN#Vikram #VP11 pic.twitter.com/nalYt2eqc5

— VersatileStar™️ (@StarVersatile) June 26, 2022