விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலங்களாக உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Mr and Mrs சின்னத்திரை.பிரபல ஜோடிகளை ஒன்றினைத்து சில போட்டிகள் வைத்து அதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகவுள்ளது.வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா இணைந்து தொகுத்து வழங்கவுள்ளனர்.இந்த சீசனில் சின்னத்திரையில் பிரபலமான 10 ஜோடிகள் பங்கேற்க உள்ளனர்.இதற்கான முதல் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்