தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஓ மனப்பெண்ணே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் டீசல். GV பிரகாஷ் குமார் நடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் அடங்காதே படத்தின் இயக்குனரும் பிரபல நடிகருமான இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார்.

மேலும் வினய், சாய்குமார், அனன்யா, விவேக் பிரசன்னா, தங்கதுரை, தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் டீசல் திரைப்படத்தை SP சினிமாஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தேவராஜலு மார்க்கண்டேயன் தயாரிக்க, THIRD EYE ENTERTAINMENT நிறுவனம் வழங்குகிறது. MS.பிரபு ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்யும் டீசல் திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

முன்னதாக நேற்று (ஜூன்28) டீசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது டீசல் திரைப்படத்தின் உருவான விதம் குறித்த புதிய GLIMPSE வீடியோ வெளியானது. ஹரிஷ் கல்யாணின் டீசல் GLIMPSE வீடியோ இதோ…