தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகவும் திகழும் T.ராஜேந்தர் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து T.ராஜேந்தர் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதற்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக T.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல வேண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி T.ராஜேந்தர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற T.ராஜேந்தர் அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு T.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் T.ராஜேந்தர் அவர்கள் தனது மகன் சிலம்பரசன்TR மற்றும் மனைவி உஷாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. T.ராஜேந்தர் அவர்கள் பூரண குணமடைந்து வர வேண்டி ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் சிகிச்சை பெறும் T.ராஜேந்தர் உடன் சிலம்பரசன்TR இருக்கும் புகைப்படம் இதோ…
 

அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ள தனது தந்தை டி.ராஜேந்தர் உடன் சிலம்பரசன் ! @SilambarasanTR_ #SilambarasanTR #trajendar pic.twitter.com/EeNn1sVoXZ

— Galatta Media (@galattadotcom) June 29, 2022