எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனக்கே உரித்தான பாணியில் மிகச் சிறப்பாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை படத்தில் நடித்து வருகிறார். 2 பாகங்களாக விடுதலை படம் ரிலீஸாகவுள்ளது. மேலும் மௌன படமாக தயாராகும் காந்தி டாக்ஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கர், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தொடர்ந்து சந்திப் கிஷன் நடிப்பில் PAN INDIA படமாக தயாராகி வரும் மைக்கேல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இதனிடையே சேதுபதி மற்றும் செக்கச் சிவந்த வானம் திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் தற்காலிகமாக VJS 46 அழைக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு DSP என பெயரிடப்பட்டுள்ளது.

முன்னாள் மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்ற அணுக்ரீத்தி வாஸ் கதாநாயகியாக நடிக்கும் DSP திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் வெங்கடேஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்யும் DSP திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார்.

வருகிற டிசம்பர் மாதம் DSP திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் DSP படத்தின் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Happy to share #DSP first look.

Thank you ☺️@ponramvvs @karthiksubbaraj@immancomposer @kaarthekeyens@kalyanshankar @anukreethy_vas @stonebenchers @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @veerasamar @kumar_gangappan @sherif_choreo @Dineshsubbaraya1 @radhikassiva pic.twitter.com/FtosXTDvyx

— VijaySethupathi (@VijaySethuOffl) November 10, 2022